தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
8-10 பரிமாறுவது
  1. 1-1/2 கப் சேமியா
  2. 3/4 கப் கண்டன்ஸ்டு மில்க்
  3. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  4. 8-10பாயில் கப் அல்லது சிலிகான் கப்
  5. கீர் செய்ய
  6. 1/2 லி பால்
  7. 2 டேபிள்ஸ்பூன் பாஸ்மதி அரிசி
  8. 1/4 கப் சர்க்கரை
  9. 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா
  10. அலங்கரிக்க
  11. சிறிதுபாதாம் முந்திரி பிஸ்தா
  12. சிறிதுமாதுளை

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் சேமியாவை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வறுக்கவும்

  2. 2

    சிறுக சிறுக தண்ணீர் சேர்த்து சேமியாவை வேக வைக்கவும் சேமியா தொட்டுப் பார்க்கும் பொழுது மிருதுவாக ஆன பிறகு இதில் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும்

  3. 3

    கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்து கெட்டியாக வரும் சமயத்தில் அடுப்பை அணைக்கவும் சூடாக இருக்கும்போதே சிலிகான் கப் அல்லது பாயில் கப் படத்தில் காட்டியவாறு அழுத்தி கிண்ணம் போல் தயாரித்துக் கொள்ளவும்

  4. 4

    இதேபோல அனைத்தையும் தயாரித்து இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்

  5. 5

    கீர் செய்ய பாஸ்மதி ரைஸ் 30 நிமிடம் ஊறவைத்து பிறகு தண்ணீர் முழுவதும் வடித்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  6. 6

    அரைத்து வைத்த அரிசி பொடியில் பால் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்

  7. 7

    பாத்திரத்தில் பாலை ஊற்றி பால் பொங்கி வரும் சமயத்தில் தயாரித்து வைத்திருக்கும் அரிசி பால் கலவையை ஊற்றி குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும் அரிசி நன்றாக வெந்து வரும்பொழுது நறுக்கி வைத்துள்ள பாதாம் முந்திரி பிஸ்தா மற்றும் சர்க்கரை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்

  8. 8

    சிறிது கெட்டியான பிறகு ஆற விடவும் பின் 30 நிமிடம் ஃப்ரீஸரில் வைக்கவும்

  9. 9

    இரண்டு மணி நேரம் கழித்து தயாரித்து வைத்திருக்கும் சேமியா கப்பலிலிருந்து படத்தில் காட்டியவாறு மெதுவாக எடுக்கவும் இப்போது தயாரித்து வைத்திருக்கும் கீரை இதில் ஊற்றி மேலே பாதாம் முந்திரி மாதுளையால் அலங்கரிக்கவும்

  10. 10

    சுவையான அட்டகாசமான சேமியா கப் கீர் தயார்... ரைஸ் கீர்க்கு பதிலாக ரபடி, பாசந்தி குலோப்ஜாமுன் என அனைத்தையும் வைத்து பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (7)

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes