முட்டை சேர்க்காத பிளம் கேக் (Eggless plum cake recipe in tamil)

Senthamarai Balasubramaniam
Senthamarai Balasubramaniam @cook_24912331

முட்டை சேர்த்து தான் கேக் செய்வார்கள் . முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு எக்லெஸ் கேக் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள். Cookpad நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.#grand 2#

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 நபர்
  1. 2 கப் மைதா
  2. 1 கப் சர்க்கரை
  3. 100 மி.லி காய்ச்சிய பால்
  4. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 1 டீஸ்பூன் கொக்கோ பவுடர்
  6. 3 டேபிள் ஸ்பூன் வெண்ணை
  7. 1/2 டீஸ்பூன் சமையல் சோடா
  8. 1 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  9. 6 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ்
  10. 50 கிராம் சர்க்கரை கேரமல் செய்ய
  11. பட்டை, கிராம்பு, ஏலக்காய் எல்லாவற்றிலும் ஒன்று
  12. சிறியதுண்டு சுக்கு
  13. விருப்பப்பட்ட ட்ரை ஃப்ரூட்ஸ்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    50 கிராம் சர்க்கரையை அடி கனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில் ஏற்றி
    கேரமல் செய்து கொள்ளவும்.

  2. 2

    கேரமல் ஆறியபின் ஆரஞ்சு ஜூஸ் கொக்கோ பவுடர் டிரை புருட்ஸில் பாதியை கேரமலில்
    கலந்து வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் ஒரு கப் சர்க்கரையை போட்டு கிராம்பு பட்டை ஏலக்காய் சுக்கு ஆகியவற்றை அத்துடன் சேர்த்து நன்றாக தூள் செய்து கொள்ளவும்

  3. 3

    ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து மைதா மாவு,தூள் செய்த சர்க்கரை,,பால்,வெண்ணை,பேக்கிங் பவுடர்,சமையல் சோடா,கேரமல்,வெனிலா எசன்ஸ் கொக்கோ பவுடர் ஆகியவற்றை கலந்து பிளன்டரில்நன்றாக அடிக்கவும்

  4. 4

    அடி கனமான வட்டமான பாத்திரத்தில் எண்ணெய் தடவி கேக் கலவையை பாதியளவு ஊற்றவும். ஒரு குக்கரில் தூள் உப்பு போட்டு அதன் மேல் கேக் கலவை ஊற்றிய பாத்திரத்தை வைத்து அடுப்பிலேற்றி 20 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும் கேக் நன்றாக வெந்ததும் மீதி உள்ள டிரை ஃப்ரூட் வைத்து அலங்கரிக்கவும். சூப்பரான சுவையான முட்டை சேர்க்காத கேக் ரெடி நீங்களும் செய்து சுவைத்து கூறுங்கள்.

  5. 5

  6. 6

  7. 7

  8. 8

  9. 9

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Senthamarai Balasubramaniam
அன்று

Similar Recipes