உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

#combo1
ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரி
வித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 3பெரிய உருளைக்கிழங்கு
  2. 1பெரிய கேரட்
  3. 2 பெரியவெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 4 பச்சைமிளகாய்
  6. 1/4ஸ்பூன் கடுகு
  7. 1/4ஸ்பூன் சோம்பு
  8. 1ஸ்பூன் கடலைப்பருப்பு
  9. 1ஸ்பூன் கடலைமாவு
  10. 1/4ஸ்பூன் மஞ்சள்தூள்
  11. ஒரு கொத்து கறிவேப்பிலை
  12. 2ஸ்பூன் எண்ணெய்
  13. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு 4 விசில் விட்டு வேக வைத்து தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடலைப்பருப்பு, சோம்பு போட்டு தாளிக்கவும்.

  4. 4

    பிறகு கடுகு போட்டு தாளிக்கவும். பிறகு நீளவாக்கில் கீறிய பச்சைமிளகாய், நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு துருவிய கேரட்டை அதில் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.

  5. 5

    பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும்.பிறகு மசித்து வைத்த உருளைக்கிழங்கு,1/4 ஸ்பூன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு போட்டு 1நிமிடம் வதக்கவும்.

  6. 6

    பிறகு அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1 நிமிடம் கொதிக்க விடவும்.கொதி வந்தவுடன் 1 ஸ்பூன் கடலை மாவை தண்ணீரில் கரைத்து மசாலாவில் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.

  7. 7

    நன்கு கெட்டி பதம் வந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி ஒரு கிளறு கிளறி பிறகு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes

More Recommended Recipes