எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 3 முருங்கைக்காய்
  2. 1 கப் தேங்காய் துருவல்
  3. 6 சின்ன வெங்காயம்
  4. 4அல்லி பூண்டு
  5. ஒரு சிறிய துண்டு இஞ்சி
  6. 2 பச்சை மிளகாய்
  7. 1/4 டீஸ்பூன் ஜீரகம்
  8. 1/2டீ ஸ்பூன் கடுகு
  9. 2 வற்றல் மிளகாய்
  10. தேவைக்கு கறிவேப்பிலை
  11. தேவைக்கு உப்பு
  12. 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  13. 1/4டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  14. 1/2டீ ஸ்பூன் மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முருங்கைக்காயை தோல் சீவி விட்டு நடுத்தரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல்,, ஜீரகம், பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், இஞ்சி இவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதில் உப்பும், மஞ்சள் தூளும் சேர்த்து முருங்கைக்காயை அந்த தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.

  4. 4

    முருங்கைக்காய் வெந்ததும் அதை வடிகட்டியில் வடித்து வைக்கவும்.

  5. 5

    சீனச் சட்டி அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வற்றல் மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து விட்டு, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்

  6. 6

    பின்னர் இதில் அரைத்தத் தேங்காயைப் சேர்த்து வதக்கவும். பச்சை மணம்
    மாறியதும் வேக வைத்த முருங்கைக்காயை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி இரண்டு நிமிடம் வேக வைத்து இறக்கவும். மிகவும் சுவையான முருங்கைக்காய் தோரன்
    ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes