தேவையான பொருட்கள்

  1. அரை கிலோ முட்டைக்கோஸ்(இரண்டு வகையான முட்டைக் கோஸ்)
  2. ஒரு பெரிய வெங்காயம்
  3. ஒரு கொத்து கறிவேப்பிலை
  4. ஒரு ஸ்பூன் கடுகு உளுந்த பருப்பு
  5. இரண்டு ஸ்பூன் எண்ணெய்
  6. ஒரு ஸ்பூன் சீரகம்
  7. மூன்று பச்சை மிளாகாய்
  8. மூன்று ஸ்பூன் பாசி பருப்பு
  9. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக எடுத்து வைக்கவும்.வெங்காயம் பச்சை மிளாகாய் முட்டைக் கோஸ் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பாசிபருப்பை தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.

  2. 2

    முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு உளுந்த பருப்பு பொரிந்ததும் அதில் வெங்காயம் பச்சை மிளாகாய் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

  3. 3

    வதங்கியதும் அதில் முட்டைக் கோஸ் பாசி பருப்பு சிரகம் உப்பு சேர்த்து

  4. 4

    மூடி போட்டு வதக்கவும்.5 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.

  5. 5

    இப்போது சுவையான முட்டைக் கோஸ் பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

எழுதியவர்

joycy pelican
joycy pelican @cook_20701700
அன்று

Similar Recipes