எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 300 கிராம் பாஸ்மதி அரிசி
  2. 2 கேரட்
  3. 6பீன்ஸ்
  4. 1குடமிளகாய்
  5. 1 வெங்காயம்
  6. 4 பூண்டு பல்
  7. 2பச்சை மிளகாய்
  8. காலிபிளவர் சிறிதளவு
  9. 4முட்டை
  10. 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  11. 2 டீஸ்பூன் மிளகு பொடி
  12. 5 டீஸ்பூன் எண்ணெய்
  13. தேவையானஅளவு உப்பு
  14. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் கழுவிய பாஸ்மதி அரிசி மற்றும் உப்பு சேர்த்து முக்கால் பாகம் வெந்தவுடன் வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும். பிறகு காய்கறிகள் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பூண்டு, பச்சை மிளகாய் தாளித்து பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு கேரட்,பீன்ஸ், காலிபிளவர், குடமிளகாய் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். நன்றாக வதங்கியதும் அதில் உப்பு சேர்த்து சோயா சாஸ் விட்டு மீண்டும் வதக்க வேண்டும். மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு முட்டைகளை உடைத்து உப்பு மிளகு சேர்த்து வதக்கிக் இதை காய்கறி கலவையோடு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    அடுத்து வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்.
    இறுதியாக அதில் உப்பு சரிபார்த்து நல்ல மிளகு தூள் தூவி கிளறி இறக்கவும்.

  4. 4

    சைனீஸ் மிக்ஸ்டு பிரைடு ரைஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes