வெஜ் பிரைட் ரைஸ் (ஹோட்டல் ஸ்டையில்)

Mallika Udayakumar
Mallika Udayakumar @cook_16779252

#குழந்தைகள்டிபன்ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250 கிராம்-பாஸ்மதி அரிசி
  2. 1 கட்டு-வெங்காயத்தாள்
  3. 50 கிராம்-கேரட்
  4. 50 கிராம்-பீன்ஸ்
  5. 50 கிராம்-பச்சை மிளகாய்
  6. 50 கிராம்-குடைமிளகாய்
  7. 50 கிராம்-பச்சை பட்டாணி
  8. 50 கிராம்-முட்டைக்கோஸ்
  9. சிறிதளவு-இஞ்சி, பூண்டு விழுது
  10. தேவையானஅளவு-எண்ணெய்
  11. தேவையானஅளவு-உப்பு
  12. சிறிதளவு-மிளகு பொடி
  13. 1/4 ஸ்பூன்-சோயா சாஸ்
  14. சிறிது-சில்லி சாஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாஸ்மதி அரிசியை 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 2:1 என்ற அளவில் ஊற்றி,ஒரு பெரிய குக்கரின் உள்ளே அரிசி ஊற வைத்த பாத்திரத்தை வைத்து.இரண்டு விசில் விடவும்.
    அதில் ஒரு டிஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி கொண்டால் அரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.அரிசிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும்.

  2. 2

    கேரட், பீன்ஸ், குடைமிளகாய், வெங்காயத்தாள் மற்றும் முட்டைகோஸ் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கவும், பச்சை பட்டாணியை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுதுகளை போட்டு வதக்கி, அத்துடன் வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.
    பிறகு குடைமிளகாய், பச்சை மிளகாய், பீன்ஸ் ஆகியவற்றை சிறிது நேரம் வதக்கவும்.
    பிறகு முட்டைகோஸ், கேரட், பச்சை பட்டாணி போட்டு வதக்கவும்.அதில் சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் ஊற்றவும்.

  3. 3

    அது வதங்கிய பிறகு சாதத்தை போட்டு கிளறவும். அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.பிறகு மிளகு பொடி சேர்த்து கிளறவும், அதன்பின் சிறிதளவு சர்க்கரை தேவை என்றால் சேர்த்து கிளறி இறக்கவும்.
    சுவையான வெஜ் பிரைட் ரைஸ் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mallika Udayakumar
Mallika Udayakumar @cook_16779252
அன்று

Similar Recipes