தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 நபர்
  1. குடைமிளகாய் சிறியது 2
  2. வேகவைத்த சாதம் 2 கப் நெய் 1 மேக உப்பு 1 தேக கடுகு தாளிக்க கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
  3. கடலைப்பருப்பு 1 மேக உளுத்தம்பருப்பு 1 மேக காய்ந்த மல்லி 2 மேக புளி சிறிதளவுதேங்காய் துருவல் 4 மேக உப்பு 1/2 மேக பெருங்காயம் 1/2 தேக காய்ந்த மிளகாய் 6 மஞ்சள் பொடி 1/2 தேக

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் கடாயில் எண்ணெய் இல்லாமல் கடலைப்பருப்பு 1 மேக உளுத்தம்பருப்பு 1 மேக காய்ந்த மல்லி 2 மேக புளி சிறிதளவுதேங்காய் துருவல் 4 மேக உப்பு 1/2 மேக பெருங்காயம் 1/2 தேக காய்ந்த மிளகாய் 6 மஞ்சள் பொடி 1/2 தேக

    இவை அனைத்தும் நன்கு வறுத்து எடுக்கவும்

  2. 2

    ஒவ்வொரு பொருளாக சேர்த்து வறுக்கவும்

  3. 3

    தேங்காய் துருவல் ஈரப்பதம் போகும் வரை வறுக்கவும்

  4. 4

    வறுத்து எடுத்த பொருட்களை சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்

  5. 5

    பின்னர் கடாயில் 1 தேக நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்க வேண்டும்.

  6. 6

    பின்னர் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும் 3 நிமிடம். 1/2 மேக உப்பு சேர்த்து வதக்கவும்

  7. 7

    பின்னர் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள பொடியை 4 மேக சேர்த்து வதக்கவும்

  8. 8

    பின்னர் 2 கப் வேகவைத்த சாதம் சேர்த்து கிளறவும். சுவைக்கேற்ப அரைத்த பொடி உப்பு வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளலாம்

  9. 9

    பரிமாறுவதற்கு முன்பு 1 மேக நெய் கொத்தமல்லி பொடியாக நறுக்கியது சேர்த்து பரிமாறவும்.

  10. 10

    சுவையான ஆரோக்கியமான குடைமிளகாய் சாதம் தயார்..
    வாழ்க வளமுடன் 🙏

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suganya G
Suganya G @cook_29740851
அன்று

Similar Recipes