கஞ்சி கொழுக்கட்டை

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
austin tx

கஞ்சி கொழுக்கட்டை கேரளாவில் பிரபலமான காலை சிற்றுண்டி.கஞ்சி கொழுக்கட்டை என்பது கேரளா மட்டா அரிசியில் தேங்காய் உருண்டைகளை தண்ணீரில் வேகவைத்து செய்வது.இது வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.இது ஒரு சத்தான காலை சிற்றுண்டி.வெங்காய சட்னியுடன் சேர்த்து கஞ்சி கொழுக்கட்டை சாப்பிடும் போது சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 நபருக்கு
  1. 1 1/2 கப்கேரளா மட்டா அரிசி
  2. 1 கைப்பிடிஅரிசி
  3. 4 மேஜைக்கரண்டிதுருவிய தேங்காய்
  4. சுவைக்கேற்பஉப்பு
  5. சட்னிக்கு தேவையான பொருட்கள்
  6. 1/2 கப்துருவிய தேங்காய்
  7. 3காய்ந்த மிளகாய்
  8. ஒரு சிறிய துண்டுபுளி
  9. சிறிது(பின்ச்)பெருங்காயம்
  10. 4சிறிய வெங்காயம்
  11. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கேரள அரிசியை 5 மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    தண்ணீரை வடித்து விட்டு அரிசி,தேங்காய்,உப்பு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    மாவு இட்லி/தோசை மாவு பதத்திற்கு இல்லாமல் மீடியமாக இருக்க வேண்டும்.

  4. 4

    அரைக்கும் போது நீர் கூடுதலாக சேர்க்கப்பட்டால், தேங்காய் பேஸ்டுடன் ஒரு கூர்மையான நில அரிசி சேர்க்கவும் மற்றும் குறைந்த சுழற்சியில் சிறிது நிமிடங்களுக்கு கலவையை கிளறிவிடவும்.

  5. 5

    மாவினை எலுமிச்சை பழ அளவு சிறு சிறு உருண்டைகளாக எடுத்துக் கொள்ளவும்.

  6. 6

    ஒரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசி உருண்டைகளை சேர்த்து 25-30 நிமிடங்கள் வேகவைக்கவும்.

  7. 7

    வெங்காய சட்னியுடன் வேக வைத்த கொழுக்கட்டை உருண்டைகளை,கொழுக்கட்டை வேக வைத்த தண்ணீருடன் பரிமாறவும்.

  8. 8

    வெங்காயச்சட்னி: துருவிய தேங்காய்,புளி,உப்பு,காய்ந்த மிளகாய்,பெருங்காயம்,சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
அன்று
austin tx
My blog: https://passionofcookingaswani.blogspot.com/& fb pagehttps://www.facebook.com/aswani.kitchen/?ref=aymt_homepage_panel
மேலும் படிக்க

Similar Recipes