கோழி கறி முட்டை கோலா (scotch egg)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#everyday4
மாலை நேர சிற்றுண்டிகள் புதுமையாக சாப்பிடும்போது எதிர்பார்ப்புகள் கூடும். அந்தவகையில் இந்த கோழி கறி முட்டை கோலாவை செய்து சாப்பிட்டு உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 150 கிராம் எலும்பில்லாத சிக்கன்
  2. 3 தேக்கரண்டி பொட்டுகடலை
  3. 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  4. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  5. 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
  6. 1 தேக்கரண்டி உப்பு
  7. 1 பெரிய வெங்காயம்
  8. 1 பச்சை மிளகாய்
  9. 1மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  10. 1 மேஜைக்கரண்டி எண்ணெய்
  11. தேவையானஅளவு கொத்தமல்லி இலைகள்
  12. 3 முட்டைகள்
  13. 2 மேஜைக்கரண்டி சோள மாவு
  14. 2 மேஜைக்கரண்டி மைதா மாவு
  15. 1/4 தேக்கரண்டி மிளகு தூள்
  16. 1/2 தேக்கரண்டி உப்பு
  17. 1/2 கப் பிரெட் கிரம்ப்ஸ்
  18. தேவையானஅளவு தண்ணீர்
  19. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். இதில் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து நைசாக அரைக்கவும்.

  2. 2

    அரைத்த சிக்கன் மசாலாவை ஒரு கிண்ணத்தில் மாற்றவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் மல்லி இலைகளை சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது மற்றும் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு கிண்ணத்தில் மைதா மாவு மற்றும் சோள மாவை சேர்த்து கலந்து விடவும். இதில் வேகவைத்த முட்டைகளை பிரட்டி ஒரு தட்டில் வைக்கவும்.

  4. 4

    மீதமுள்ள மாவில் மிளகுத் தூள் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    உள்ளங்கைகளில் எண்ணை தடவி தேவையான அளவு சிக்கன் மசாலாவை சமமாக தட்டிக் கொள்ளவும். இதில் ஒரு முட்டையை வைத்து நன்கு உருட்டி கொள்ளவும்.

  6. 6

    இதனை சோள மாவு கரைசலில் முக்கி எடுக்கவும். அதன்பின் பிரட் தூளில் பிரட்டிக் கொள்ளவும். இவ்வாறு அனைத்து முட்டைகளையும் தயார் செய்யவும்.

  7. 7

    பொரிப்பதற்காக எண்ணெய் நன்கு சூடானதும், ஒவ்வொரு உருண்டையை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அட்டகாசமான சுவையில் தயாராகியுள்ள இந்த கோழிக்கறி முட்டை கோலா சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes