தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
8 நபர்கள்
  1. 1/4 கிலோ கடலைப்பருப்பு
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 5 வர மிளகாய்
  4. 2 துண்டு இஞ்சி
  5. 2 சிட்டிகை பெருங்காயத் தூள்
  6. 3மேசைக்கரண்டி சோம்பு
  7. 3 கொத்து கறிவேப்பிலை
  8. 1கைப்பிடி மல்லி இலைகள்
  9. 2 மேஜைக்கரண்டி உப்பு
  10. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கடலைப்பருப்பை 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீர் வடித்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். கூடவே இஞ்சி உப்பு சோம்பு வர மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.

  2. 2

    இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். இதனோடு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். பெருங்காயத் தூளை சேர்த்து பிசைந்து கொள்ளவும். இவற்றை உருண்டைகளாக பிடித்து வடை போல தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

  3. 3

    பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிடவும். மொறுமொறுப்பான டீக்கடை மசால் வடை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes