தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
ஆறு பேர்
  1. ஒரு கப் துருவிய மாங்காய்
  2. 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. ஒரு டீஸ்பூன் வெந்தயம்
  5. ஒரு டீஸ்பூன் கடுகு
  6. ஒரு டேபிள்ஸ்பூன் வெல்லம்
  7. சிறிதுகல்லுப்பு
  8. ஒரு கரண்டி நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். மாங்காயை துருவிக் கொள்ளவும்.வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து துருவிய மாங்காயை போட்டு லேசாக வதக்கவும்.

  3. 3

    சிறிது வதங்கிய பிறகு மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும். இப்பொழுது உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.

  4. 4

    என்னை பிரிந்து சுருண்டு வரும் பொழுது வெந்தய பொடி, வெல்லம் சேர்த்து கிளறவும்.

  5. 5

    எல்லாம் ஒன்றாக ஆன பிறகு இறக்கி வைக்கவும். அருமையான மாங்காய் தொக்கு ரெடி.இது தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes