மாங்காய் தொக்கு(mango thokku recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

ஆங்கில புத்தாண்டு-2023 வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் பிடித்த, காரம், இனிப்பு,புளிப்பு கலந்த தொக்கு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
10பேர்
  1. 4மாங்காய்
  2. 2டேபிள் ஸ்பூன் கடுகு
  3. 1டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  4. 2-4ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்,காரத்திற்கேற்ப
  5. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1/2ஸ்பூன் பெருங்காயத்தூள்
  7. 1ஸ்பூன் வெல்லம்
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1/2கப் கடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    மாங்காய் தோலுடன் அல்லது தோல் சீவி துருவி வைக்கவும்.தோராயமாக 4கப் இருக்கும்.

  3. 3

    வெறும் வாணலியில் வெந்தயம் சேர்த்து வறுக்கவும்.பின் அதனுடன் கடுகு சேர்த்து வறுத்து,வெடித்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆறவிட்டு அரைக்கவும்.

  4. 4

    அதே வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து துருவிய மாங்காய் சேர்த்து வேக வைக்கவும். 7-10 நிமிடங்களில் வெந்து விடும்.

  5. 5

    பின் மஞ்சள் தூள், மிளகாய்.தூள், பெருங்காயத்தூள்,உப்பு மற்றும் அரைத்த பொடி சேர்த்து கலந்து விடவும்.

  6. 6

    உப்பு சரி பார்க்கவும்.எண்ணெய் பிரிந்து வந்ததும்,சிறிதளவு வெல்லம் சேர்த்து கிளறவும்.

    பின் அடுப்பை அனைத்து,ஆறவிட்டு வேறு பாத்திரத்திற்கு மாற்றி பிரிட்ஜ்-ல் வைத்து சாப்பிடலாம்.

  7. 7

    அவ்வளவுதான்.
    புளிப்பும்,இனிப்பும், காரமுமான மாங்காய் தொக்கு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes