தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பேர்
  1. 2கப் முருங்கைக்கீரை
  2. 1டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு,1 டேபிள் ஸ்பூன்உளுத்தம் பருப்பு
  3. 10சின்ன வெங்காயம், 5பூண்டு பற்கள், 4வர மிளகாய்
  4. சிறியஅளவில் புளி
  5. 1கப் தேங்காய் துருவல்
  6. தேவையான அளவு உப்பு
  7. 5ஸ்பூன் நல்லெண்ணெய்
  8. தாளிக்க: கடுகு, உளுந்து,கருவேப்பிலை, வரமிளகாய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முருங்கை இலையை நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு வாணலியில் 3ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

  3. 3

    பின் வரமிளகாய்,பூண்டு சேர்த்து வதக்கி,சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    இப்பொழுது முருங்கைக்கீரை சேர்த்து வதக்கவும்.கீரை நன்றாக வெடித்து வதங்கும்.புளி சேர்க்கவும்.

  5. 5

    கீரை வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும். இரண்டு நிமிடங்களில் அடுப்பை அனணத்து விட்டு,இதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.

    அரைக்கும் பொழுது, மொத்த புளியையும் சேர்க்காமல், சுவையை பார்த்து, தேவைக்கேற்ப புளியின் அளவைக் கூட்டிக் குறைக்கவும்.

  6. 6

    கடைசியாக வாணலியில்,2ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை,உளுந்து வர மிளகாய் சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டவும்.

  7. 7

    அவ்வளவுதான். சுவையான முருங்கைக் கீரை சட்னி ரெடி சட்னி

    சட்னி கெட்டியாக வேண்டாம் எனில், தண்ணீர் இன்னும் கொஞ்சம் சேர்த்து அரைக்கவும்.

    இது வெறும் சாதத்துடன் மற்றும் தோசைக்கு சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes