ராகி முருங்கை அடை#immunity #book

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

ராகியில் கால்சியமும் முருங்கைக்கீரையில் எல்லாவிதமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நாலுபருக்கு
  1. ராகி மாவு 200 கிராம்
  2. முருங்கைக்கீரை ஒரு கப்
  3. பெரிய வெங்காயம்-2
  4. பச்சை மிளகாய் ஒன்று
  5. வரமிளகாய் 2
  6. தாளிக்க
  7. ஆயில் ஒரு டேபிள் ஸபூன்
  8. கடுகு ஒரு ஸ்பூன்
  9. உளுந்து ஒரு ஸ்பூன்
  10. கடலைப்பருப்பு அரை ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் கீரையைகழுவி வைத்துக்கொள்ளவும். பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.

  2. 2

    வாணலியில் ஆயில்ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து, வர மிளகாய்,வெங்காயம் பச்சைமிளகாய் கீரையை போட்டு வதக்கவும். உப்பு சேர்த்து நன்றாக வதக்கியதும்,கீரை கலவையை ராகி மாவில் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். மாவு பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

  3. 3

    ஊறிய மாவை சிறிய உருண்டைகளாக எடுத்து வாழை இலையில் எண்ணை தடவி அடை போல் தட்டவும்.தட்டிய ஆடையை தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேகவிடவும்.

  4. 4

    சுவையான ராகி அடை, காரச் சட்னியுடன் பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes