தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் மைதா மாவு
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1 குடை மிளகாய்
  4. 2 கேரட்
  5. 5 to 6 பீன்ஸ்
  6. 1/2 முட்டைகோஸ்
  7. 2 பல் பூண்டு
  8. 1 துண்டு இஞ்சி
  9. 1 மேஜைக்கரண்டி மிளகு தூள்
  10. தேவையான அளவு உப்பு
  11. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வெங்காயம், குடை மிளகாய், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை தயார் செய்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    இப்பொழுது ஒரு bowl ல் மைதா மாவு, கால் மேஜைக்கரண்டி அளவு உப்பு, 2 அளவு எண்ணெய், மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
    பின்பு ஒரு பாத்திரத்தில் வைத்து இறுக்கமாக மூடி போட்டு அதை சுமார் 40 லிருந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.

  3. 3

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
    எண்ணெய் சுட்டதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
    இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாய், கேரட், முட்டைகோஸ், மற்ற

  4. 4

    பின்னர் அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சிறிது நேரம் ஆற விடவும்.

  5. 5

    அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
    இப்பொழுது சப்பாத்தி கல்லில் ஒவ்வொரு உருண்டைகளாக வைத்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நாம் செய்து வைத்திருக்கும் ஸ்டப்பிங்கை வைக்கவும்.
    ஸ்டப்பிங்கை வைத்த பின் அவரவருக்கு பிடித்தமான வடிவில் மோமோஸ்ஸை மடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

  6. 6

    பின்பு இட்லி தட்டை எடுத்து அதில் எண்ணெய்யை தடவி இந்த மோமோஸ்ஸை அதில் வைக்கவும்.

  7. 7

    அடுத்து இட்லி அவிக்கும் பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி தட்டை வைத்து மூடி போட்டு சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை அதை வேக விடவும்.
    10 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து மோமோஸ்ஸை எடுத்து சுட சுட பரிமாறவும்.
    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான வெஜ் மோமோஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Krithika Krithika
Krithika Krithika @cook_33035070
அன்று

Similar Recipes