பேரிச்சை செவ்வாழைப்பழ வால் நட் கேக்(dates walnut cake recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#CF9 #X'mas - Dates Red banana Valnut Healthy Cake...
Merry X'Mas..🎄
No -. Maida - Sugar - Otg..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45-50 நிமிடங்கள
15பீஸ்
  1. 2cup - கோதுமை மாவு
  2. 1-1/2 கப் பால்
  3. 3/4 கப் எண்ணெய்
  4. 250 gm - பேரிச்சம்பழம்
  5. 3- செவ்வாளை பழம்
  6. 1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்,1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  7. ஒரு கைப்பிடி வால்நட்
  8. ஒரு கைப்பிடி முந்திரி
  9. ஒரு கைப்பிடி பாதாம்
  10. 1/2 கப் - ப்ராவுன் சக்கரை அல்லது நாட்டு சக்கரை

சமையல் குறிப்புகள்

45-50 நிமிடங்கள
  1. 1

    முதலில் பேரிச்சம்பழத்தின் கொட்டையை எடுத்துவிட்டு அல்லது கொட்டை இல்லாத பழத்தை 1கப் கொதிக்கிற பால் விட்டு 30 நிமிடம் ஊற விடவும். தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கவும், கேக் பாத்திரத்தில் பட்டர் பேப்பர் போட்டு அதற்க்கு மேல் எல்லா பக்கங்களிலும் எண்ணெய் தடவி வைத்துக்கவும்

  2. 2

    ஒரு பவுளில் செவ்வாழை யை உரித்து சின்னதாக கட் செய்து விஸ்க் வைத்து நன்கு மசித்துக்கவும், பாலுடன் சேர்த்து பேரிச்சம்பழத்தை மிக்ஸியில் நன்கு அரைத்து மசித்த பழத்துடன் சக்கரை சேர்த்து நன்றாக கலந்துக்கவும்

  3. 3

    அத்துடன் எண்ணெய் சேர்த்து 5 நிமிடம் நன்றாக பீட் செய்துக்கவும். எலக்ட்ரிகல் பீட்டர் அல்லது விஸ்க் வைத்து செய்யவும்

  4. 4

    அதன்பிறகு அதில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா வை சல்லடையில் சலித்து சேர்த்து நன்கு கலந்துக்கவும்

  5. 5

    அதில் மீதி 1/2 கப் ஆற வைத்த பால் சேர்த்து கேக் மாவு பதத்துக்கு கலந்து அதில் வால்நட்,சேர்த்து ஒரு பக்கமாக கலந்து கேக் பாத்திரத்தில் ஊத்தி நன்றாக தட்டி டாப் செய்த பிறகு மேல் கட் செய்த வால்நாட், முந்திரி, பாதாம், பேரிச்சம்பழம் சேர்த்து அலங்கரித்து 10 நிமிடம் ப்ரீ ஹீட்செய்த குக்கரில் மீடியம்ஹீட்டில் 50 நிமிடம் அல்லது otg யில் 180 டிகிரி.40-45-நிமிடத்திற்கு பேக் செய்யவும்

  6. 6

    ஆறின பிறகு எடுத்து கொஞ்சம் சக்கரை பவுடர், பட்டை பவுடர் 1/2 ஸ்பூன் மேல் தூவி அலங்கரித்து தேவையான ஷேப்பில் கட் செய்து x'mas சை மகிழ்ச்சி யாக கொண்டாடவும்... அசத்தலான ஆரோகியமான மிக சுவையான பேரிச்சம்பழ வால்நாட் கேக் தயார்..குறிப்பு - பேரிச்சம்பப்பழ, செவ்வாழை இனிப்பு போதுமானால் சக்கரை சேர்க்க வேண்டியதில்லை.. நட்ஸ் அவுங்க விருப்பம் போல் சேர்த்துக்கலாம்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes