ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.
#made1

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
  1. 2கப் ராகி மாவு
  2. 2கப் பொடித்த வெல்லம்
  3. 1கப் தண்ணீர்
  4. 1/4கப் நட்ஸ் பொடித்தது
  5. 1/4 கப் நட்ஸ் பவுடர்
  6. 2டேபிள் ஸ்பூன் திராட்சை
  7. 1/2 கப் பிரெஷ் தேங்காய் துருவல்
  8. 1டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  9. 1/4 கப் நெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ராகி மாவை சலித்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு பௌலில் சேர்க்கவும். நெய், வெல்லம், நட்ஸ் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    பாதாம், முந்திரி, பிஸ்தாவை இலேசாக வறுத்து பொடித்து, பாதி பவுடரும் செய்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் திராட்சையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    வேறு ஒரு கடாயில் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வறுத்து எடுத்து தயாராக வைக்கவும்.

  5. 5

    கடாயை ஸ்டவ்வில் வைத்து ராகி மாவு, நெய் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து வைத்துக்கொள்ளவும்.

  6. 6

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து வெல்லம், தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பாகு காய்ச்சி எடுத்து வடித்து வைக்கவும்.

  7. 7

    பின்னர் கொதிக்கும் பாகில் வறுத்த ராகி மாவை சேர்த்து நன்கு கட்டிகள் சேராமல் கலக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்ந்து கலந்து விடவும்.

  8. 8

    கொஞ்சம் கெட்டியானதும் வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவல், பொடித்து வைத்துள்ள நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  9. 9

    பின்னர் ஏலக்காய் தூள் சேர்த்து, நட்ஸ் பவுடர், நெய்
    சேர்ந்து கலந்து இறக்கவும்.

  10. 10

    கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உருண்டைகள் பிடிக்கவும். இப்போது மிகவும் சத்தான, சுவையான ராகி நட்ஸ் லட்டு தயார்.

  11. 11

    தயாரான ராகி, நட்ஸ் லட்டுகளின் மேல் முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.

  12. 12

    இப்போது மிக மிக சுவையான ராகி, நட்ஸ் லட்டு சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes