* முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

முருங்கைக் காய், வயிற்றுப் புண், மலச்சிக்கல், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும்.இதனை சமைத்து சாப்பிட்டால், சிறுநீரகம் பலப்படும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
5 பேர்
  1. 1/4 கப்சிறிதுபெரிய துண்டுகளாக நறுக்கின முருங்கைக் காய்
  2. 1 டீ ஸ்பூன்கடுகு
  3. 1 ஸ்பூன்வெந்தயம்
  4. எலுமிச்சை அளவுபுளி
  5. 1 1/2 டேபிள் ஸ்பூன்சாம்பார் பொடி
  6. ருசிக்குகல் உப்பு
  7. 2சி.மிளகாய்
  8. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  9. 1 சிறு துண்டுவெல்லம்
  10. 1/4 கப்ந.எண்ணெய்
  11. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  12. தேவைக்குதண்ணீர்
  13. 1 ஆர்க்குகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    புளியை ஊற வைத்து, பின் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

  2. 2

    முருங்கைக்காயை, பெரிய துண்டுகளாக நறுக்கி, தேவையான தண்ணீர் விட்டு, உப்பு, ம.தூள் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு, வெந்தயம், மிளகாய் தாளிக்கவும்.

  4. 4

    பிறகு அடுப்பை மீடியத்தில் வைத்து, புளிக்கரைசல், சாம்பார் பொடி,உப்பு, போட்டு பொடி வாசனை போக கொதிக்க விடவும்.

  5. 5

    கொதித்து சிறிது சுண்டியதும், வெந்த முருங்கைக்காயை போடவும்.

  6. 6

    கொதித்து கெட்டியானதும், அடுப்பை நிறுத்தி விட்டு வெல்லம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை போடவும்.

  7. 7

    மேலே காய்ச்சாத ந.எண்ணெய் விட்டு ஒன்றாக கலக்கவும்.இப்போது,* முருங்கைக்காய் வத்தக் குழம்பு* தயார்.சுடு சாதத்தில் நெய்(அ) ந.எண்ணெய் விட்டு குழம்புடன், சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.செய்து சாப்பிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes