மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

வத்தக் குழம்பு (அ ) காரக் குழம்பில் பல வகை உண்டு.இந்த குழம்பில் மாங்காய் போட்டிருப்பதால், புளி அதிகம் தேவையில்லை.மேலும் இது ந.எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம்.ஒரு வாரம் வரை கூட உபயோகப்படுத்தலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
6 பேர்
  1. 1/2 மாங்காய்கிளி மூக்கு மாங்காய்
  2. 2முருங்கைக்காய்
  3. 15சின்ன வெங்காயம்
  4. 1வெள்ளை முள்ளங்கி
  5. நெல்லிக்காய் அளவுபுளி
  6. 1 டீ ஸ்பூன்கடுகு
  7. 1 டீ ஸ்பூன்வெந்தயம்
  8. 1 டீ ஸ்பூன்து.பருப்பு
  9. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  10. 1 டேபிள் ஸ்பூன்சாம்பார் பொடி
  11. ருசிக்குகல் உப்பு
  12. 2 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய்
  13. தேவைக்குதண்ணீர்
  14. 2சி.மிளகாய்
  15. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  16. சிறிய கட்டிவெல்லம்
  17. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  18. 1ஸ்பூன்கடுகு, வெந்தயம், வறுத்த பொடி

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    மாங்காயை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

  2. 2

    முள்ளங்கியை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    சின்ன வெங்காயத்தையும் தோலுரித்துக் கொள்ளவும்.முருங்கைக்காயை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

  4. 4

    புளியை ஊற வைத்து, கரைத்து நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.வெறும் கடாயில், கடுகு, வெந்தயத்தை வறுத்து, பொடிக்கவும்.

  5. 5

    கடாயில் ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு, வெந்தயம், து.பருப்பு, சி.மிளகாயை தாளிக்கவும்.

  6. 6

    பிறகு,அடுப்பை சிம்மில் வைத்து, சி.வெங்காயம், ம.தூள், க.உப்பு சிறிது போட்டு வதங்கியதும்,மாங்காய்,முள்ளங்கி, முருங்கைக்காய் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்.

  7. 7

    வெந்ததும், புளிக்கரைசலை ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.

  8. 8

    பொடி வாசனை போனதும்,வெல்லம் போட்டு ஒன்று சேர கொதித்து கெட்டியானதும்,பெருங்காயத் தூள்,கறிவேப்பிலை போட்டு,மேலே காய்ச்சாத, ந.எண்ணெய், வறுத்த பொடி, போட்டு இறக்கவும்.

  9. 9

    இப்போது, மிகவும் சுவையான,* மாங்காய்,முருங்கைக்காய், முள்ளங்கி, வத்தக் குழம்பு* தயார்.செய்து பார்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes