*கத்தரிக்காய் தொக்கு*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இது நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். சிறுநீரக கற்களை கரைக்கும் வலிமை பெற்றது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
8 பேர்
  1. கத்தரிக்காய் 1/2 கி
  2. பெரிய சைஸ் வெங்காயம் 3
  3. தக்காளி 5
  4. ம.தூள் 1/2 டீ ஸ்பூன்
  5. சாம்பார் பொடி 2 1/2 ஸ்பூன்
  6. புளி எலுமிச்சை அளவு
  7. ப.மிளகாய் 3
  8. உப்பு ருசிக்கு
  9. தாளிக்க:- கடுகு 1 1/4 டீ ஸ்பூன்
  10. சோம்பு 3/4 டீ ஸ்பூன்
  11. எண்ணெய் 5 டேபிள் ஸ்பூன்
  12. நறுக்கின கொத்தமல்லி தழை 2 டேபிள் ஸ்பூன்
  13. தண்ணீர் தேவையான அளவு
  14. அலங்கரிக்க:- வட்டமாக நறுக்கின தக்காளி துண்டுகள், கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.

  2. 2

    கத்தரிக்காயை சுத்தம் செய்து தண்ணீரில் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிப் போடவும்.

  3. 3

    மிக்ஸி ஜாரில் தக்காளியை போட்டு நன்கு அரைக்கவும்.

  4. 4

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு போட்டு வெடித்ததும், சோம்பை சேர்த்து நன்கு வறுக்கவும்.

  5. 5

    வறுத்ததும் கத்தரிக்காயை சேர்த்து நன்கு பொரித்து தட்டில் எடுத்துக் கொள்ளவும்.

  6. 6

    அதே எண்ணெயில், வெங்காயத்தை நன்கு வதக்கவும்.

  7. 7

    பிறகு, ம.தூள், ப.மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.

  8. 8

    நன்கு வதங்கியதும், தக்காளி விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும், கத்தரிக்காயை சேர்த்து வேகவிடவும்.

  9. 9

    புளியை ஊற வைத்து பின் நன்கு கெட்டியாக கரைத்து வடிகட்டி சேர்த்து, புளி வாசனை போனதும், சாம்பார் பொடியை சேர்த்து கொதிக்க விடவும்.

  10. 10

    கொதித்து கத்தரிக்காய் குழையாமல் ஒன்று சேர அடுப்பை நிறுத்தி விட்டு மேலே, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய், கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

  11. 11

    இறக்கினதும், நன்கு கலந்து, பௌலுக்கு மாற்றவும்.

  12. 12

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*கத்தரிக்காய் தொக்கு*தயார். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும். விருப்பப் பட்டால், இஞ்சி, பூண்டு விழுது, வெல்லம் சிறிய கட்டி சேர்த்துக் கொள்ளலாம்.

  13. 13

    குறிப்பு:- இந்த தொக்கு, கோதுமை தோசை, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு சைட்டிஷ்ஷாக மிகவும் நன்றாக இருக்கும். சூடான சாதத்தில் நெய் விட்டு, கலந்து சாப்பிடவும், சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes