*கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#WA
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.பெண்களுக்கு தேவையான சத்துக்கள் காய்கறிகளில் நிறைய உள்ளன.அவைகளை விதவிதமான வகையில் சமைத்து சாப்பிட்டால் சத்துக்கள் வீணாகாமல் நேரடியாக கிடைக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பேர்
  1. பச்சை காராமணி 1/4 கி
  2. பெரிய சைஸ் கேரட் 1
  3. துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  4. ம.தூள் 1/2 டீ ஸ்பூன்
  5. தனி மி.தூள் 1/2 ஸ்பூன்
  6. உப்பு ருசிக்கு
  7. தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன்
  8. க.பருப்பு 1/2 ஸ்பூன்
  9. உ.பருப்பு 1/2 ஸ்பூன்
  10. சி.மிளகாய் 2
  11. சீரகம் 3/4 டீ ஸ்பூன்
  12. பெருங்காயத்தூள் 1 டீ ஸ்பூன்
  13. கறிவேப்பிலை 2 ஆர்க்கு
  14. எண்ணெய் 1 ஸ்பூன்
  15. தண்ணீர் தெளித்து வேக வைக்க

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கேரட், காராமணியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, பொரிந்ததும், மிளகாய், க.பருப்பு, உ.பருப்பு, சிவந்ததும், எண்ணெயிலேயே ம.தூள், மி.தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

  4. 4

    தாளித்ததும், கேரட், காராமணியை போட்டு, மூடி 2 நிமிடம் வதங்கியதும், சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

  5. 5

    வெந்ததும், பெருங்காயத்தூள், தேங்காய் துருவலை சேர்த்து, நன்கு கிளறி, தண்ணீர் வற்றி, குழையாமல் வெந்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.

  6. 6

    பிறகு பிளேட்டிற்கு மாற்றவும். இப்போது, சுவையான, சுலபமான,*கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*தயார். செய்து பார்த்து, சாப்பிட்டு, மகளிர் தினத்தை, நன்கு கொண்டாடவும்.

  7. 7

    குறிப்பு:- இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். சூடான சாதத்தில் நெய் விட்டும் சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes