சேமியா கட் லெட்(பறவையின் கூடு)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. உருளைக்கிழங்கு 500 கிராம்
  2. சேமியா 100 கிராம்
  3. மைதா மாவு 6 டீஸ்பூன்
  4. மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
  5. கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
  6. துருவிய இஞ்சி 1/2 டீஸ்பூன்
  7. மாங்காய் பொடி 1/2 டீஸ்பூன்
  8. 1பச்சை மிளகாய்
  9. உப்புத் தூள் தேவையான அளவு
  10. மிளகு தூள் 1/2 டீஸ்பூன்
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. சோம்பு தூள் 1/2 டீஸ்பூன்
  13. வேக வைத்த பச்சை பட்டாணி 2 ஸ்பூன்
  14. நறுக்கிய கொத்தமல்லி 1 கைப்பிடி அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

  2. 2

    மைதா மாவில் மிளகு தூள், உப்பு தூள் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் 3 ஸ்பூன் விட்டு பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு தூள் தாளித்து, மிளகாய் தூள்,கரம் மசாலா தூள், மாங்காய் பொடி சேர்த்து, தேவையான உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து ஆற விடவும்.

  4. 4

    ஆறியதும் அதை உருண்டைகளாக பிடித்து நடுவில் அழுத்தி விடவும்.

  5. 5

    இதனை மைதா கரைசலில் முக்கி எடுத்து தூள் செய்த சேமியாவில் புரட்டவும்.

  6. 6

    எல்லா உருளைக்கிழங்கு உருண்டைகளையும் இது போல் செய்து வைத்துக் கொள்ளவும்.

  7. 7

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த கட்லெட்களை பொரித்து எடுக்கவும்.

  8. 8

    வேக வைத்த பச்சை பட்டாணிகளை நடுவில் வைத்து தட்டில் அடுக்கவும்.

  9. 9

    இது பார்ப்பதற்கு பறவையின் கூடு போல் குழந்தைகளை கவரும் விதமாக இருக்கும்.

  10. 10

    தக்காளி சாஸூடன் சாப்பிட சுவையாக இருக்கும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes