புடலங்காய் பால் கூட்டு-சுரைக்காய் கேரட் சாம்பார்-பூசணி ஹல்வா

Pavumidha
Pavumidha @cook_13801083
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பரிமாறுவது
  1. பூசணி ஹல்வா செய்ய:
  2. 2 கப் பூசணி
  3. 1/2 கப் வெல்லம்
  4. 7-8 கிஸ்மிஸ் பழம்
  5. 6-7 முந்திரி
  6. 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  7. 8 டீஸ்பூன் நெய்
  8. சுரைக்காய் கேரட் சாம்பார் செய்ய::
  9. 1 கப் சுரைக்காய்
  10. 1 கப் கேரட்
  11. 1/4 கப் புளி கரைசல்
  12. 1/4 கப் துவரம் பருப்பு
  13. 2 டீஸ்பூன் மல்லி தூள்
  14. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  15. 1 டீஸ்பூன் சாம்பார் பொடி
  16. 1 டீஸ்பூன் சீரகம்
  17. 7 சின்ன வெங்காயம்
  18. 4 பூண்டு
  19. 1/4 டீஸ்பூன் பெருங்காயம்
  20. 1/2 டீஸ்பூன் உப்பு
  21. 1 டீஸ்பூன் மல்லி தழை
  22. 3 டீஸ்பூன் எண்ணெய்
  23. 1/2 டீஸ்பூன் சீரகம்
  24. 2 டீஸ்பூன் கருவேப்பிலை
  25. புடலங்காய் பால் கூட்டு செய்ய:::
  26. 1 கப் புடலங்காய்
  27. 1/2 கப் கடலை பருப்பு
  28. 2 மல்லி தூள்
  29. 1 டீஸ்பூன் சீரகம்
  30. 5 டீஸ்பூன் தேங்காய் துருவல்
  31. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  32. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  33. 1/2 டீஸ்பூன் உப்பு
  34. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  35. 2 டீஸ்பூன் எண்ணெய்
  36. 1 டீஸ்பூன் கடுகு உளுந்து பருப்பு
  37. 2 காய்ந்த மிளகாய்
  38. 2 டீஸ்பூன் கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    பூசணி ஹல்வா செய்ய:::பூசணிக்காயை தோல் நீக்கி நன்றாக துருவி வைக்கவும்.கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு,கிஸ்மிஸ் சேர்த்து கிளறி தனியாக வைக்கவும்.

  2. 2

    பின்னர் கடாயில் பூசணிக்காய் சேர்த்து கிளறவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.பச்சை வாசனை போன பின்னர் ஏலக்காய் தூள் மற்றும் சக்கரை சேர்த்து கிளறவும்

  3. 3

    சிறிது நெய் ஊற்றி கிளறவும்.முந்திரி பருப்பு மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து கொள்ளவும்.கடாயில் ஒட்டாத பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.சுவையான சிவப்பு பூசணிக்காய் ஹல்வா தயார்.

  4. 4

    புடலங்காய் பால் கூட்டு:::குக்கரில் புடலங்காய் மற்றும் பருப்பு சேர்த்து 2 விசில் வைத்து எடுக்கவும்.

  5. 5

    மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம்,மஞ்சள் தூள்,மிளகாய் தூள், மல்லிதூள்,உப்பு,கரம் மசாலா சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பின்பு அரைத்த விழுதினை குக்கரில் சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.

  6. 6

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து பருப்பு, கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து தாளித்து புடலங்காய் கலவையில் சேர்த்து கிளறவும். நன்றாக வற்றிய பின் அடுப்பை அணைத்து விடவும்.

  7. 7

    சுரைக்காய் கேரட் சாம்பார் செய்ய:::முதலில் பருப்பு,சிறிது தண்ணீர் மற்றும் தக்காளி சேர்த்து பருப்பினை நன்கு வேக விடவும்.பருப்பு சிறிதளவு வெந்ததும் அதில் வெங்காயம், பூண்டு,கேரட் சேர்த்து கொள்ளவும்.

  8. 8

    பின்னர் அதில் மல்லி பொடி, மிளகாய் தூள், சீரகம்,மஞ்சள் தூள், சாம்பார் பொடி, பெருங்காயம் சேர்த்து கிளறவும்.10 நிமிடம் கழித்து சுரைக்காய் மற்றும் புளி கரைசல் சேர்த்து நன்றாக வேக விடவும்.சுரைக்காய் வெந்ததும் சாம்பார் சிம்மில் குறைந்த தீயில் வைக்கவும்

  9. 9

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து பருப்பு, வெங்காயம்,கருவேப்பிலை,சோம்பு சிறிது மிளகாய் தூள் சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்த்து 10 நிமிடம் பின் அடுப்பை அனைத்து விடவும் ஶ்ரீசுவையான சுரைக்காய் கேரட் சாம்பார், பூசணிக்காய் ஹல்வா மற்றும் புடலங்காய் பால் கூட்டு தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pavumidha
Pavumidha @cook_13801083
அன்று
Chennai

Similar Recipes