தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ரவை 300 கிராம்
  2. தேங்காய் ஒன்று
  3. சுண்டக்காய்ச்சிய பால் அரை கப்
  4. நெய் 100 மிலி
  5. சீனி 300 கிராம்
  6. ஏலக்காய் நான்கு
  7. மைதா இரண்டு ஸ்பூன்
  8. முட்டை இரண்டு
  9. பாதாம் முந்திரி சிறிது
  10. வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேங்காயை துருவி இலேசாக தண்ணீர் தெளித்து திக்கான பால் முக்கால் கப் எடுக்கவும்.

  2. 2

    அந்த தேங்காய் பாலில் ரவை மற்றும் மைதாவை கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

  3. 3

    சர்க்கரையை பொடித்து கலவையுடன் கலந்து மேலும் அரை மணி ஊற வைக்கவும்.

  4. 4

    மேலும் முட்டை மற்றும் ஏலக்காயை பொடித்து நெய்யுடன் சேர்த்து கலக்கி கலவையில் சேர்க்கவும்.

  5. 5

    கடைசியாக வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கி சிறு கிண்ணங்களில் நெய் தடவி ஊற்றவும்.

  6. 6

    மேலே பாதாம் முந்திரி பரப்பி அலங்கரிக்கவும்

  7. 7

    அவனை 180 டிகிரி பத்து நிமிடம் ப்ரீஹீட் செய்து கிண்ணங்களை பேக்கிங் ட்ரேயில் வைத்து பதினைந்து நிமிடங்கள்.180 டிகிரியில் வேக வைத்து எடுக்கவும்

  8. 8

    அல்லது குக்கரில் உப்பு தூள் சேர்த்து சூடேற்றி அதனுள் ஒரு ஸ்டான்ட் வைத்து அதன் மேல் கிண்ணங்களை வைத்து சிறு தீயில் முப்பது நிமிடங்கள் வேக வைக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes