ஆட்டுக்கல் மணத்தக்காளிக் கீரை துவையல்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள கீரையை வைத்து துவையல்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. மணத்தக்காளிக் கீரை
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 2 பச்சை மிளகாய்
  5. 2 கொத்து கறிவேப்பிலை
  6. இஞ்சி சிறிய துண்டு
  7. 5 பல் பூண்டு
  8. உப்பு தேவைக்கு
  9. தண்ணீர் சிறிதளவு
  10. அரை கப் துருவிய தேங்காய்
  11. 2டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இதற்கு தேவையான பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு ஆகியவற்றை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதோடு மணத்தக்காளிக்கீரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    நன்றாக வதங்கிய பின்பு ஆட்டுக்கல்லில் போட்டு அரைக்க வேண்டும். அதோடு 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை மற்றும் அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    சுவையான மட்டும் மிகவும் சத்தான மணத்தக்காளி கீரை துவையல் ரெடி. நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes