தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 6 வெண்டைக்காய்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. 1 டேபிள் ஸ்பூன் கடுகு
  6. 1 கொத்து கறிவேப்பிலை
  7. 1 டேபிள் ஸ்பூன் வத்தல் தூள்
  8. 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  9. அரை கப் துருவிய தேங்காய்
  10. அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்
  11. அரை டேபிள்ஸ்பூன் சீரகம்
  12. உப்பு தேவைக்கு
  13. தண்ணீர் தேவைக்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் வெண்டைக்காயை நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

  2. 2

    பாத்திரத்தில் தாளிக்க எண்ணெய் சேர்க்க வேண்டும் அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். அதில் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்பு அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்க்கவேண்டும்.

  3. 3

    இப்பொழுது அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் வத்தல் தூள் மல்லித் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இதுக்கு மசாலா தயார் செய்ய ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு தேங்காய் அதோடு மஞ்சள்தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். அரைத்து வைத்திருக்கும் மசாலாவை வெண்டைக்காயை சேர்த்து வதக்க வேண்டும். பின்பு மூடி வைத்து கொதிக்கும் வரை காத்திருக்கவும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    சுவையான வெண்டைக்காய் கிரேவி ரெடி. நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes