மணத்தக்காளிக் கீரை துவையல்

Vidhyashree Manoharan
Vidhyashree Manoharan @cook_22267268

#immunity #book மணத்தக்காளி கீரை நிறைந்த சத்துக்கள் உடையது. வயிற்றுப் புண்களை ஆற்றும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2-கைப்பிடி மணத்தக்காளிக் கீரை
  2. 15- சின்ன வெங்காயம்
  3. 10- பல் -பூண்டு
  4. 1-டேபிள்ஸ்பூன்- கடலைப்பருப்பு
  5. 1- டேபிள் ஸ்பூன் -உளுத்தம் பருப்பு
  6. 8- வரமிளகாய்
  7. எலுமிச்சை அளவு- புளி
  8. 1/2- மூடி தேங்காய்
  9. 1டீஸ்பூன் -சீரகம்
  10. 1 கொத்து- கறிவேப்பிலை
  11. சிறிது- கொத்தமல்லி இலை
  12. தேவையானஅளவு -உப்பு
  13. தேவையானஅளவு -எண்ணெய்
  14. தாளிக்க:-
  15. ஒரு டீஸ்பூன் -கடுகு
  16. 1கொத்து- கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் மணத்தக்காளி கீரையை ஆய்ந்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.அதன்பின் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    சிறிது எண்ணெய் சேர்த்து மணத்தக்காளிக் கீரையை நன்றாக சுருண்டு வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.இப்பொழுது முதலில் வறுத்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பின் வதக்கிய மணத்தக்காளிக் கீரையை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது கடுகு கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான மணத்தக்காளி துவையல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vidhyashree Manoharan
Vidhyashree Manoharan @cook_22267268
அன்று

Similar Recipes