ரவா கேசரி கேக்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#book 11 (2)

#lockdown

Lockdown காலத்தில் என் செல்ல மகளின் பிறந்தநாள் வந்ததால் என்னால் கடையில் கேக் வாங்க இயலவில்லை. எனவே வீட்டில் உள்ள ரவையை வைத்து கேசரி கேக் செய்து கொடுத்தேன் அவளும் மகிழ்வுடன் ரவா கேசரி கேக் வெட்டி கொண்டாடினாள். அவளும் மகிழ்ச்சி நானும் மகிழ்ச்சி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ரவா - 2 கப்
  2. டூட்டி ப்ரூட்டி - தேவைக்கு
  3. நெய் - தேவைக்கு
  4. முந்திரி - 10
  5. காய்ந்த திராச்சை - 10
  6. ஜெர்ரி - 10
  7. உப்பு - சிட்டிகை
  8. சர்க்கரை - 2 கப்
  9. புட் கலர் (அ) குங்கும பூ

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு நான் ஸ்ட்டிக் கடாயில் 3ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரி திராட்சை அகியவற்றை நன்கு சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் மீதம் உள்ள நெய்யில் ரவையை நன்றாக கலர் மாறாமல் வறுத்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் கடாயில் 3கப் தண்ணீர் ஊற்றி அதில் சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அடுப்பை மிதமான தீயில் வைத்து ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி படாமல் நன்றாக கிளறவும். பின்னர் ஒரு மூடி போட்டு 5நிமிடம் வேக விடவும். பின் சர்க்கரை சேர்த்து கிளறவும் அதனுடன் சிறிது தண்ணீரில் கரைத்து வைத்துள்ள புட் கலர் அல்லது சூடான பாலில் ஊற வைத்த குங்கும பூ சேர்த்து நனறாக கிளறவும்.

  3. 3

    பின்னர் சிறிது ஏலக்காய் தூள் மற்றும் விரும்பிய அளவு நெய் சேர்த்து கடாயில் ஒட்டாமல் நன்றாக திரண்டு வரும் வரை கிளறவும். பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சேர்த்து கிளறவும். பின்னர் ஒரு ரவுண்டு தட்டில் தாராளமாக நெய் தடவி அதன் மேல் கேசரியை கொட்டி சரி சமமாக தடவவும். 10 நிமிடம் அப்படியே விட்டு பின் அதை வேறு ஒரு தட்டுக்கு மாற்றி அதன் மேல் செர்ரி மற்றும் டூட்டி புருட்ட்டி கொண்டு அலங்கரிக்கவும். இப்பொது அருமையான ரவை கேசரி கேக் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manjula Sivakumar
அன்று

Similar Recipes