நாட்டு காய்கறி புளிக் குழம்பு

#book
இந்த புளிக்குழம்பு எங்கள் பக்கம் விரத சமையல் அன்று செய்யப்படுவதாகும் .மேலும் இதில் நாட்டுக் காய்கறிகள் எதை வேண்டுமானாலும் கலந்து செய்யலாம். வெண்டைக்காய் முக்கியமாக சேர்க்க வேண்டும். இந்த குழம்பிற்கு வெங்காயம், தக்காளி, பூண்டு எதுவும் தேவையில்லை. வெறும் காய்கறிகளை மட்டும் கலந்து செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காய்கறிகளை நன்றாக கழுவி கொள்ளவும்.மேற்கூறிய அளவுகளில் காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு மிளகாய் பெருங்காயத்தூள் கறவேப்பிலை தாளித்து,காய்கறிகளை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
- 2
புளியை சிறிது நீர்க்க கரைத்த கொள்ளவும். அதில் உப்பு,மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து, ஒரு கொதி கொதிக்கவிடவும். பிறகு கொதித்த புளியில் காய்கறிகளை சேர்க்கவும். காய்கறிகளை நன்கு வேகவிடவும்.
- 3
வெந்த காய்கறிகளில் கொஞ்சம் பருப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். குழம்பு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் பருப்பு தண்ணியை சேர்த்துக்கொள்ளலாம். கடைசியில் சிறிது வெல்லம் சேர்த்து கலக்கவும். கொத்தமல்லி தலை சேர்க்கவும். சுவையான நாட்டு காய்கறி புளிக்குழம்பு தயார். தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். பொரியலுக்கு எடுத்து வைத்துள்ள தேங்காய் துருவல் கொஞ்சம் நீர் சேர்த்து பிழிந்து பால் எடுத்து அதை குழம்பில் சேர்த்தால் சுவை கூடும். தேங்காய் துருவலை பின் பொரியலுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪


அவியல் (Avial recipe in Tamil)


பொரிச்ச கூட்டு


ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)


முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு


நொய் அரிசி உப்புமா(NOI ARISI UPMA RECIPE IN TAMIL)


அவியல்(avial) (Aviyal recipe in tamil)


பிந்தி மோர் குழம்பு


நெல்லிக்காய் தயிர் பச்சடி


கத்தரிக்காய் கூட்டு🍆🍆


வெண்டைக்காய் வறுவல்


பீன்ஸ் கேரட் பொரியல்


வெண்டைக்காய் சட்னி (Vendaikkaai chutney recipe in tamil)


பாசி பருப்பு சாம்பார்


பூண்டு சின்னவெங்காயம் கெட்டி குழம்பு


சேப்பங்கிழங்கு அன்னாசி மோர் குழம்பு (Seppakilanku annaasi morkul


வேர்க்கடலை குழம்பு


சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃


வெண்டைக்காய் பொரியல்


தக்காளி சேமியா கிச்சடி/tomoto


பருப்பு உருண்டை குழம்பு


அவல் உப்புமா (Aval upma recipe in tamil)


தயிர் வெண்டைக்காய்


ரேஷ்மி பனீர்🧀🌶️


பாரம்பரிய மஞ்சள் பொங்கல் - தாளகக்குழம்பு


சேனைக்கிழங்கு பொரியல் (Senaikilanku poriyal recipe in tamil)


தஹி சேமியா(தயிர் சேமியா)🍚


சொப்பு சாமானில் மிளகு சாதம்


கோதுமை ரவை கிச்சடி🥕


மாங்காய் துவையல்

கமெண்ட் (2)