தேவையான பொருட்கள்

  1. பால் - 1/2 லிட்டர்ரோஸ்மில்க்
  2. காரட் சாறு - 1 கப்
  3. வினிகர் - 1 டீஸ்பூன்
  4. சீனி - 1/2 கப்
  5. தண்ணீர் - 1 1/2 கப்
  6. மலாய் :-
  7. பால் - 3 கப்
  8. சீனி - 1 கப்
  9. நட்ஸ் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாலை காய்ச்சவும்.
    பால் நன்கு காய்ந்தபின் காரட் சாறு சேர்க்கவும்.
    1 நிமிடம் கழித்து வினிகர் சேர்க்கவும்.

  2. 2

    நன்கு கலந்து இறக்கி மெல்லிய வெண்துணியில் வடிகட்டி வைக்கவும்.

  3. 3

    20 முதல் 30 நிமிடம் கழித்து எடுத்து கைகளால் மென்மையாக பிழிந்து தனியே எடுக்கவும்.

  4. 4

    பனீரை கைகளால் ஒன்று சேர நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  5. 5

    .1/2 கப் சீனியை 1 1/2 கப் தண்ணீரில் கலந்து அகலமான பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும்.

  6. 6

    .காரட் பனீரை நமக்கு விருப்பமான வடிவத்தில் தயார் செய்து கொதிக்கும் சீனி பாகில் சேர்த்து 10 - 15 நிமிடங்கள் மூடி போட்டு விடவும்.

  7. 7

    அடுப்பை அணைத்து ஆறியபின் ரசகுல்லாவை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

  8. 8

    பாலை அடுப்பில் வைத்து காய்ந்தபின் சிறுதீயில் வைத்து,காரட் துருவல்,சீனி சேர்த்து நன்றாக பாதியாக வற்றும் வரை காய்ச்சி கொள்ளவும்.

  9. 9

    .பால் ஆறியபின் தயார் செய்து வைத்துள்ள ரசகுல்லாவை தனியே எடுத்து பாலில் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்வித்து நட்ஸ் தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes