முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல்

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#nutrient3 மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கட்டு முருங்கை கீரை
  2. 1/2 கப் வேர்க்கடலை
  3. 2 காய்ந்த மிளகாய்
  4. 1ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  5. 1/2டீஸ்பூன் கடுகு
  6. 1/2டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  7. 4 பல் பூண்டு
  8. 5சின்ன வெங்காயம்
  9. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாயை வறுத்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு நாள் பல் பூண்டு வெங்காயம் தாளிக்கவும்

  3. 3

    அதனுடன் அரைத்த முருங்கைக்கீரையை சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள்தூள்,சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

  4. 4

    முருங்கைக்கீரை வெந்தபின் வறுத்துப் பொடித்த வேர்க்கடலை பொடியை தூவி அடிப்பிடிக்காமல் உதிரியாக கிளறி எடுக்கவும்.

  5. 5

    இரும்பு சத்து மிக்க முருங்கைக் கீரை பொரியல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes