முருங்கைக்கீரை கேழ்வரகு பக்கோடா (Drumstick leaves, ragi pakoda)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#mom
கேழ்வரகு மற்றும் முருங்கைக்கீரை இரண்டிலும் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இத்துடன் உளுந்து
சேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் சத்தானது. சத்துக்கள் நிறைந்த சுவையான இந்த பக்கோடாவை அனைத்து தாய்மார்களும் செய்து சுவைக்கவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
  1. 2 கப் கேழ்வரகு மாவு
  2. 1 கப் முருங்கை இலைகள்
  3. 2 டேபிள் ஸ்பூன் உளுந்துப்பொடி
  4. 1 வெங்காயம்
  5. 5 பச்சை மிளகாய்
  6. 1/4 கப் கடலைப்பருப்பு
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணை பொறிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    கேழ்வரகு மாவை சலித்து எடுத்துக்கொள்ளவும். கடலை பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

  2. 2

    உளுந்து பருப்பை வெறும் வாணலியை சூடு செய்து, சிவக்க வறுத்து, ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து நன்கு பவுடர் செய்துகொள்ளவும்.

  3. 3

    வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

  4. 4

    ஒரு பௌலில் கேழ்வரகு மாவு, உளுந்து மாவு, ஊற வைத்த கடலைப்பருப்பு, முருங்கை இலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சமிளகாய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கெட்டியாக பிசைந்து, சிறிது சிறிதாக கிள்ளி ஒரு தட்டில் வைக்கவும்.

  5. 5

    வாணலியில் எண்ணை சேர்த்து சூடானதும், தயாராக தட்டில் வைத்துள்ள பக்கோடாக்களை சூடான எண்ணெயில் போட்டு நன்கு பொரிக்கவும. ஓரிரு முறை கலக்கி விடவும். நன்கு பொரிந்ததும் நுரை குறைத்துவிடும். பின்னர் எடுத்து சர்விங் பௌலுக்கு மாற்றவும்.

  6. 6

    இப்போது சத்தான, சுவையான கேழ்வரகு, முருங்கை இலை பக்கோடா சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes