தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று பேர்
  1. பொடியாக அரிந்த முட்டைகோஸ் கேரட் குடைமிளகாய் வெங்காயம், தக்காளி சாஸ் அல்லது ஒரு பெரிய தக்காளி, வேக வைத்த காலிஃப்ளவர் பச்சைப் பட்டாணி சிறிதளவு வெந்த உருளைக்கிழங்கு தலா ஒரு கப்
  2. சோயா சாஸ் ஒரு ஸ்பூன்
  3. தக்காளி சாஸ் 2 ஸ்பூன்
  4. மேகி நூடுல்ஸ் இரண்டு பாக்கெட்
  5. ஆயில் 3 ஸ்பூன்
  6. தேவையானஅளவு உப்பு கொத்தமல்லித் தழை

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    காய்கறிகளைக் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும் பட்டாணி உருளைக்கிழங்கு காலிபிளவர் தனியாக வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி காய்கறி சேர்த்து வதக்கவும் அடுப்பை சிம்'மில் வைத்து காய்கறிகளை வேக விடவும் சோயா சாஸ் தக்காளி சாஸ் தேவையான உப்பு தூவி கலந்து மூடி வைக்கவும். சில்லி சாஸ் ஒரு ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்க்கலாம்.

  2. 2

    கரம் மசாலா தூள் அரை ஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போனதும், அடுப்பை அனைத்து விடவும் மூடி வைக்கவும்.நூடுல்ஸ் 2 பாக்கெட் கொதிக்கும் நீரில் போட்டு வேக வைக்கவும். வெந்ததும் நீரை வடித்துவிடவும். வெந்த காய்கறிகளுடன் நூடுல்சை கலந்து விடவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான வெஜ் நூடுல்ஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes