எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1கப் ரவை
  2. 2கப் சர்க்கரை
  3. 3_1/2 கப் தண்ணீர்
  4. 6ஏலக்காய்
  5. 1ஸ்பூன் ரோஸ் வாட்டர்
  6. 1_1/4 கப் நெய்
  7. 25முந்திரி

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    1 கப் சர்க்கரை ஐ வெறும் பேனில் போட்டு மெல்லிய தீயில் கிளறவும்

  2. 2

    சர்க்கரை கரைந்து உருகி தேன் கலர் வரும் போது 2கப் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும் கேரமல் கரையும் வரை கொதிக்க விடவும் (இந்த எல்லா செய்முறையும் கண்டிப்பாக மிகவும் மெல்லிய தீயில் வைத்து செய்ய வேண்டும் இல்லையெனில் கேரமல் கசப்பான சுவையில் இருக்கும்)

  3. 3

    நான்ஸ்டிக் பேனில் 1 கப் நெய் விட்டு சூடானதும் ரவையை சேர்த்து நன்கு வறுக்கவும்

  4. 4

    ரவை வறுபட்டதும் ரெடியாக உள்ள கேரமல் சிரப் ஐ சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும்

  5. 5

    கேரமல் சிரப் ரவை உடன் நன்கு கலந்ததும் கொதிக்க வைத்த தண்ணீர் 1_1/2 கப் மற்றும் 1 கப் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்

  6. 6

    எல்லாம் சேர்ந்து கெட்டியானதும் மீதமுள்ள நெய் ஐ சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும் இடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறவும்

  7. 7

    பேனில் ஒட்டாமல் நன்கு உருண்டு திரண்டு வரும்போது நெய்யில் முந்திரி ஐ வறுத்து கொட்டி கிளறி இறக்கவும்

  8. 8

    இறக்கிய பின் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  9. 9

    சுவையான ரவை கேரமல் அல்வா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes