மிளகு ரசம்#sambarrasam

joycy pelican
joycy pelican @cook_20701700
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  2. மூன்று ஸ்பூன் சீரகம்
  3. இரண்டு ஸ்பூன் மிளகு
  4. இரண்டு பச்சை மிளகாய்
  5. பத்து பல் பூண்டு
  6. ஒரு கொத்து கருவேப்பிலை
  7. இரண்டு தக்காளி
  8. உப்பு தேவையான அளவு
  9. புளி எலுமிச்சை அளவு
  10. தாளிக்க:
  11. 2சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிய து
  12. ஒரு ஸ்பூன் கடுகு
  13. ஒரு ஸ்பூன் உளுந்து
  14. இரண்டு வரமிளகாய்
  15. ஒரு கொத்து கறிவேப்பிலை
  16. தேவையானஅளவு கொத்தமல்லி இலை
  17. இரண்டு ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு,பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் இல்லாமல் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு பூண்டை ஒன்றிரண்டாக தட்டிக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் புளியுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள் அரைத்து வைத்த களவையுடன் தக்காளி சேர்த்து பிசைந்து தேவையான தண்ணீர் சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பை பற்ற வைத்து கடாய் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து பொரிந்தவுடன் வெங்காயம் வதங்கிய பின் வரமிளகாய் கறிவேப்பிலை அதனுடன் கரைத்து வைத்த கலவையை சேர்த்து நுரை வரும்போது அடுப்பை அணைத்து விடவும்.

  4. 4

    பிறகு உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும். சூடான மிளகு ரசம் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

joycy pelican
joycy pelican @cook_20701700
அன்று

Similar Recipes