செட்டிநாடு முள்ளங்கி சாம்பார்  #sambarrasam

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. துவரம் பருப்பு 100 கிராம்
  2. பாசிப்பருப்பு 50 கிராம்
  3. சிறியவெங்காயம் 100 கிராம்
  4. தக்காளி ஒன்று
  5. 2முள்ளங்கி
  6. தேங்காய் கால் மூடி
  7. தனியா 1டீஸ்பூன்
  8. சீரகம் ஒரு டீஸ்பூன்
  9. மிளகு கால் டீஸ்பூன்
  10. கடலை பருப்பு கால் டீ ஸ்பூன்
  11. வர மிளகாய் 3
  12. சாம்பார் பொடி ஒரு டீஸ்பூன்
  13. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு
  15. எண்ணை தேவையான அளவு
  16. கடுகு ஒரு டீஸ்பூன்
  17. பெருங்காயம் 1/4 டீஸ்பூன்
  18. கறிவேப்பிலை சிறிதளவு
  19. கொத்தமல்லி இலை சிறிதளவு
  20. புளி ஒரு எலுமிச்சம் பழ அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    துவரம் பருப்பு பாசிப் பருப்பை சுத்தம் செய்து குக்கரில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் கால் ஸ்பூன் சேர்த்து 4 விசில் விட்டு வேக விடவும்

  2. 2

    முள்ளங்கி வெங்காயம் தக்காளி இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  3. 3

    விழுது அரைத்த தேங்காய் கால் மூடி தனியா சீரகம் கடுகு கடலை பருப்பு வர மிளகாய் இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும்

  4. 4

    முள்ளங்கி தக்காளி வெங்காயம் இவற்றை ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.

  5. 5

    வதக்கிய காய்கறிகளை வேக வைத்த பருப்புடன் சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் விடவும். ஸ்டீம் முடிந்தவுடன் புளிக்கரைசலை சேர்த்து 5நிமிடம் கொதிக்க விடவும்

  6. 6

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு வரமிளகாய் பெருங்காயம் கறிவேப்பிலை இவற்றை தாளித்து சாம்பாரில் சேர்க்கவும். சுவையான செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes