தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4 ஸ்பூன் மிளகு
  2. 3 ஸ்பூன் சீரகம்
  3. 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  4. 2 தக்காளி
  5. 10 பல் பூண்டு
  6. 2 கொத்து கருவேப்பிலை
  7. சிறிதுஅளவு கொத்தமல்லி
  8. கல் உப்பு தேவையான அளவு
  9. சிறிதுஅளவு புளி
  10. தேவையானஅளவு தண்ணீர்
  11. தாளிக்க:
  12. 2 ஸ்பூன் எண்ணெய்
  13. 1 ஸ்பூன் கடுகு
  14. 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  15. 1 வரமிளகாய்
  16. 1/4 ஸ்பூன் பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மிளகு, கடலைப்பருப்பு, சீரகம், பூண்டு சேர்த்து நன்றாக இடித்து எடுக்கவும்

  2. 2

    பிறகு தக்காளியை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்

  3. 3

    பிறகு ஒரு பாத்திரத்தில் அரிசி கழுவிய தண்ணீரில் புளியை ஊறவைக்கவும் பிறகு அதில் இடித்த மிளகு,சீரகம், தக்காளி விழுது சேர்த்து கரைத்து கொள்ளவும்

  4. 4

    பிறகு அதில் மஞ்சள் தூள், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்

  5. 5

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை அதில் சேர்க்கவும்

  6. 6

    பிறகு அதில் பெருங்காயம், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சூடானதும் இறக்கவும்

  7. 7

    இப்பொழுது சுவையான மிளகு ரசம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes