தேவையான பொருட்கள்

  1. அரிசி ஒரு கப்
  2. புளி சிறிது
  3. பூண்டு 5 பல்
  4. சிறியவெங்காயம் 5
  5. பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் தலா 2
  6. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  9. கறிவேப்பிலை ஒரு கொத்து
  10. கொத்தமல்லி இலை சிறிது
  11. தக்காளி-2
  12. கடுகு கால் ஸ்பூன்
  13. பெருங்காயத்தூள் சிறிது
  14. சாம்பார் பொடி சிறிது
  15. மிளகு 10

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். தண்ணீர்விட்டு புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், சிறிய வெங்காயம் இடித்த பூண்டு தாளிக்கவும்.

  3. 3

    கறிவேப்பிலை தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும். புளித் தண்ணீர் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். ஒரு கப் அரிசிக்கு இரண்டரை கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதித்ததும் அரிசியை சேர்த்து 3 விசில் விட்டு எடுக்கவும்.

  5. 5

    சூடான குக்கர் ரசம் சாதம் ரெடி சிப்ஸ் வைத்து பரிமாறலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes