முருங்கைக்கீரை மிளகு சீரக ரசம்

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087

முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க வல்லது. மூட்டுவலிக்கு அருமருந்து.அல்சர்க்கு மிகவும் நல்லது. இப்படி ரசம் செய்து சாப்பிட்டு வர நல்லது.
#GA4 #week2 #spinach

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. முருங்கைக்கீரை இரண்டு கை பிடி
  2. 5 வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1 பட்டைமிளகாய்
  5. ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள்
  6. மிளகு ஒரு ஸ்பூன்
  7. சீரகம் ஒரு ஸ்பூன்
  8. 6 பூண்டு பற்கள்
  9. தாளிக்க எண்ணெய் கடுகு
  10. தண்ணீர் தேவையான அளவு
  11. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முருங்கைக்கீரையை உதிர்த்து எடுத்து கொள்ளவும். தேவையான பொருள்களை எடுத்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு பட்டைமிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    தக்காளி முருங்கைக்கீரை உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    மிளகு சீரகம் பூண்டு அனைத்தையும் நன்கு இடித்து கொள்ளவும். அதை ரசத்தில் சேர்க்கவும். பிறகு மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து வதக்கவும்

  5. 5

    நன்கு கொதிக்க விடவும். சுவையான முருங்கைக்கீரை மிளகு சீரகம் ரசம் தயார்.

  6. 6

    முருங்கைக்கீரையில் அதிக சத்து உள்ளது. வாரம் இரு முறை உணவில் சேர்த்தால் மிகவும் நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087
அன்று

Similar Recipes