எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1புளி சின்ன லெமன் அளவு
  2. 2.தக்காளி இரண்டு
  3. 3.உப்பு பெருங்காயம்
  4. 4.ரச பொடி இரண்டு ஸ்பூன்
  5. 5.கறிவேப்பிலை உருவியது 2 டேபிள்ஸ்பூன்
  6. வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:
  7. 1.சிவப்பு மிளகாய் நான்கு
  8. 2.துவரம்பருப்பு இரண்டு ஸ்பூன்
  9. 3.மல்லி விதை (தனியா) நான்கு ஸ்பூன்
  10. 5.மிளகு இரண்டு ஸ்பூன்
  11. 6.சீரகம் மூன்று ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    எண்ணெயில் முதலில் மிளகாய்,துவரம்பருப்பு போட்டு (சீரகத்தை தவிர) வறுத்து அப்புறம் மல்லி போட்டு வறுத்து மிளகை போட்டு பிரட்டி உடனே இறக்கி ஆற விடவும்

  2. 2

    ஆறியதும் சீரகம் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக பொடி பண்ணி வைக்கவும்

  3. 3

    புளியை மூன்று கப் தண்ணீரில் ஊற வைக்கவும்

  4. 4

    புளியை ஒரு பாத்திரத்தில் கரைத்து ரச பொடி தக்காளி உப்பு பெருங்காயம் போட்டு கொதிக்க விடவும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

  5. 5

    பத்து நிமிஷம் கொதித்ததும் வறுத்த பொடியை போட்டு ஐந்து நிமிஷம் கொதிக்க விடவும்,
    கொஞ்சம் தண்ணீர் விட்டு விளாவி நுரைத்ததும் இறக்கி வைக்கவும்.

  6. 6

    கடுகு தாளித்து கொட்டவும்
    ரசம் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

usharani2008@gmail.com
usharani2008@gmail.com @cook_17223969
அன்று

Similar Recipes