சத்துக்கள் நிறைந்த சுவைமிகு சிக்கன் ஷேன்விச்👌👌 (Chicken sandwich recipe in tamil)

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540

#cool அற்புதமான சிக்கன் ஷேன்விச் செய்ய குக்கரில் சுத்தம் செய்யபட்ட சிக்கன் துண்டுகளை சேர்த்து மிளகு தூள் பூண்டு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் விட்டு இறக்கி வைக்கவும் பிறகு சிக்கன் ஆறியவுடன் தண்ணீரை வடித்து சிக்கனை தனியாக எடுத்து சிறிது சிறிதாக பிசிரி கொள்ளவும் கடாயில் ஆயில் சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு வெங்காயம் கொடைமிளகாய் சேர்த்து வதக்கி பிசிரிய சிக்கன் வடித்த தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து கொள்ளவும் பிறகு பவுலில் மையேனஸ் சில்லி சாஸ் ஊற்றி நன்கு கலந்து வேக வைத்த சிக்கன் மல்லிஇழை எல்லாவற்றையும் போட்டு கலக்கி ஐந்து நிமிடம் வைக்கவும் ஐந்து நிமிடம் கழித்து பிரட்டில் சிக்கன் கலந்த கலவைஒருபிரட்டில் இன் ஒரு பிரட்டில் தக்காளி சாஸ் தேய்த்து பட்டர் சிறிது வைத்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து சூடாணதோசைகல்லில் பட்டர்தடவிஅதன்மீது வைத்துஇரண்டு புறமும் சிவந்தவுடன் எடுக்கும் போது மாலை வேளை சுவை மிகுந்த சிக்கன் ஷேன்விச் தயார் 👍👍👍

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

இருபது நிமிடங்கள்
மூன்று
  1. பிரட் சிலைஸ்
  2. இரண்டுஸ்பூன்ஆயில்
  3. பெரியவெங்காயம் இரண்டு
  4. 150கிராம்சிக்கன்
  5. கொடைமிளகாய் ஒன்று
  6. மல்லி இழை
  7. பூண்டு பெரிதுஆறுபற்கள்
  8. இரண்டு ஸ்பூன்சில்லிசாஸ்
  9. தக்காளிசாஸ் பிரட்டுக்கு தேவையான அளவு
  10. இரண்டு ஸ்பூன்மையோனஸ்
  11. பட்டர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

இருபது நிமிடங்கள்
  1. 1

    முதலில் சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து குக்கரில் போட்டு தேவையான உப்பு மிளகுதூள் 1|2டீஸ்பூன் பூண்டு இரண்டுபல்சேர்த்து ஐந்து விசில் விட்டு வேக வைத்து எடுத்து ஆறியவுடன் சிக்கனை பிசிரி கொள்ளவும்

  2. 2

    பெரிய வெங்காயம் ஒன்று கொடைமிளகாய் ஒன்று ஆறு பல்பூண்டு பெரிது மல்லி இழைகள் இவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும் கடாயில் ஆயில் இரண்டுஸ்பூன் ஊற்றி சூடானதும் நறுக்கியபூண்டு நறுக்கிய வெங்காயம்

  3. 3

    கொடைமிளகாய் சேர்த்து வதக்கி வேக வைத்த சிக்கன் தண்ணீர் வடித்து அதோடு கலந்து ஐந்துநிமிடம் வேக வைத்து பிறகு வடித்த தண்ணீரை ஊற்றி வேக விடவும்

  4. 4

    தண்ணீர் சுண்டியவுடன்ஆற வைத்து பவுலில் மையோனஸ் இரண்டுஸ்பூன் சில்லி சாஸ் இரண்டுஸ்பூன் விட்டு இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும் பிறகு ஆறவைத்த சிக்கன் மல்லி இழைகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்

  5. 5

    கலந்த பிறகு ஒரு பிரட்டில் கலந்த சிக்கன்கலவையும் இன்ஒரு பிரட்டில் தக்காளி சாஸ் பட்டர் தடவி கொள்ளவும இரண்டையும் ஒன்று சேர்த்து தோசைகல் சூடானதும் பட்டர் தடவி தோசைகல்லில் பிரட்டை வைத்து இரண்டு புறமும் திருப்பி போட்டு சிவந்தவுடன் எடுக்கவும்

  6. 6

    சூப்பராண சுவை மிகுந்த சிக்கன் ஷேன்விச் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540
அன்று

Similar Recipes