முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar

#worldeggchallenge இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஸ்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
2 பேர்
  1. முட்டை ரோஸ்ட் செய்ய:
  2. 4 வேக வைத்த முட்டை
  3. 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள்
  4. 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  5. உப்பு
  6. எண்ணெய்
  7. தொக்கு செய்ய:
  8. எண்ணெய்
  9. 1பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்
  10. 1நறுக்கிய பச்சை மிளகாய்
  11. 1 டேபிள்ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  12. 1/2கப் தக்காளி சாறு
  13. 11/2 ஸ்பூன் மல்லிதூள்
  14. 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
  15. 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  16. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  17. 1/2 ஸ்பூன் மிளகுதூள்
  18. உப்பு
  19. 1/4கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி எடுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேரியதும் மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி நறுக்கி வைத்த முட்டையை சேர்த்து நன்றாக ரோஸ்ட் செய்து தனியாக எடுத்து வைக்கவும்.

  2. 2

    அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சூடேரியதும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சாறு சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும்.

  3. 3

    நன்றாக வதங்கியதும் மல்லிதூள், உப்பு, மஞ்சள்தூள், மிளகுதூள், மிளகாய்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்கு வேக விடவும்.

  4. 4

    பிறகு அதில் தண்ணீர் சேர்த்து 2நிமிடம் மூடி வேக விடவும்.

  5. 5

    அதன் பிறகு ரோஸ்ட் செய்து வைத்த முட்டையை இதில் சேர்த்து 2நிமிடம் மூடி வேக விடவும். சுவையான ஈஸியான முட்டை தொக்கு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Thulasi
Thulasi @cook_9494
அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

Similar Recipes