ரோட்டு கடை முட்டை பொடிமாஸ் (Muttai podimas recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#worldeggchallenge ரோட்டு கடை முட்டை பொடிமாஸ். ரொம்ப ரொம்ப டேஸ்டியான ஒரு ரெசிபி. சப்பாத்தி, பரோட்டாவுக்கு நல்ல சைட் டிஷ். ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கும் ஏற்ற சைட் டிஷ். சிக்கன் மசாலா சேர்க்க விருப்பம் இல்லை என்றால் கரம் மசாலா சேர்த்தும் செய்யலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2முட்டை
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1பச்சை மிளகாய்
  5. 1டேபிள் ஸ்பூன்மிளகாய்த்தூள்
  6. 1\4ஸ்பூன்மஞ்சள் தூள்
  7. 1\4ஸ்பூன்மிளகு, சீரகத் தூள்
  8. 1\4ஸ்பூன்சிக்கன் மசாலா
  9. உப்பு-தேவையான அளவு
  10. 3டேபிள் ஸ்பூன்கடலை எண்ணெய்
  11. 1கொத்துகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம், தக்காளி, பூண்டுபல், பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். கடாயில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி பிறகு பூண்டு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    அடுத்து பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்

  3. 3

    மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்த பிறகு மிதமான தீயிலேயே வைத்து 2 நிமிடம் வதக்கி விடவும் பிறகு இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றவும். மெதுவாக முட்டையை கலக்கி விடவும்

  4. 4

    ஒரு நிமிடம் அப்படியே வைத்திருந்து சிறிது வெந்ததும், லேசாக பிரட்டி விட்டு, தேவையான அளவு உப்பு, மிளகு சீரகத்தூள் சேர்க்கவும்.

  5. 5

    பிறகு சிக்கன் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி கிளறி விட்டு இறுதியாக கருவேப்பிலை தூவி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes