வேக வைத்த முட்டை கோதுமை கட்லட் (Steamed egg wheat cutlet recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

முட்டை கோதுமை கட்லட் செய்வது மிகவும் சுலபம்.இதில் கொஞ்சமும் எண்ணை சேர்க்கப் படவில்லை. டயட் இருக்க விரும்பும் அனைவரும் இந்த சத்தான கட்லட்டை இது போல் செய்து சுவைக்கலாம். #WorldeggChallenge

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 2முட்டை
  3. 1வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 2பச்சை மிளகாய்
  6. 1/4 கப் காய்கறி (விருப்படி)
  7. உப்பு தேவையான அளவு
  8. கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பௌலில் கோதுமை, உப்பு,எண்ணை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை விட கொஞ்சம் தளர்வாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    விருப்பப்பட்ட காய்கறி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, முட்டையை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

  3. 3

    பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை சேர்த்து சூடானதும் முட்டை கலவையை சேர்த்து கலந்து இறக்கினால் ஸ்டபிங் தயார்.

  4. 4

    கலந்து வைத்துள்ள மாவை எடுத்து உருண்டைகளாக உருட்டவும். அதன் நடுவில் தயாராக உள்ள முட்டை கலவையை வைத்து நன்கு மூடி கட்லட் வடிவில் செய்யவும்.

  5. 5

    பின்னர் ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடானதும் ஆவியில் வைக்கும் தட்டில் கட்லட்டை வைத்து பத்து நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து இறக்கினால் சுவையான முட்டை கோதுமை கட்லட் தயார்.

  6. 6

    இப்போது எடுத்து பரிமாறும் தட்டில் வைத்து மேலே கொஞ்சம் பூண்டு மிளகாய் பொடி தூவி சுவைக்கவும்.

  7. 7

    எண்ணை கொஞ்சமும் சேர்க்காமல் சத்தான வேகவைத்த முட்டை கட்லட் சுவைக்கத்தயார். டயட் இருக்கும் அனைவரும் இதுபோல் செய்து சுவைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes