தேவையான பொருட்கள்

15நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 1/2 கப் பிரியாணி அரிசி
  2. 2பெரிய உருளை கிழங்கு
  3. 1காலிஃளாவர்
  4. 1தக்காளி
  5. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1/2 கப் புளிக்காத தயிர்
  7. 2வெங்காயம்,2 பச்சைமிளகாய்
  8. கைப்பிடி அளவு புதினா மல்லி இலை
  9. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  10. 1ஸ்பூன் மல்லி தூள்
  11. 1/2 ஸ்பூன் கரம் மசால
  12. 1ஸ்பூன் ஜீரகம்
  13. 2பிரிஞ்சி இலை, ஒரு துண்டு பட்டை,3ஏலக்காய்,4 கிராம்பு
  14. 2டேபிள் ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    அரிசியை நன்கு கழுகி 30நிமிடம் தண்ணீரில் ஊறவிடவும்

  2. 2

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து 2ஸ்பூன் நெய் விட்டுசூடானதும் சீரகம்.,பிரிஞ்சி இலை பட்டை, சோம்பு, ஏலக்காய்,சேர்த்து வறுத்து அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கிக்கவும்

  3. 3

    அத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி, மஞ்சள்தூள்,மிளகாய் தூள்,மல்லித்தூள், மசாலாதூள் சேர்த்து நன்கு வதக்கி நறுக்கி வைத்திருக்கும் தக்காளி சேர்த்து வதக்கிக்கவும்

  4. 4

    தக்காளி நன்கு வதங்கினதும், நறுக்கி வைத்திருக்கும் உருளை கிழங்கை சேர்த்து லேசாக் வதக்கி விட்டு, கூடவே காலிஃலவர் சேர்த்து, வதக்கி, தேவையான உப்பு, தயிர் கலந்து, புதினா மல்லி சேர்த்து வதக்கிக்கவும்

  5. 5

    மசாலா, அரிசியுடன் 1கப் அரிசிக்கு 1 1/2 கப் என்ற விகிதத்தில் தண்ணி சேர்த்து மேல் 2ஸ்பூன் நெய் விட்டு குக்கரை மூடி ஒரு சத்தம் வந்ததும் ஸ்டாவ்வ் ஆப் செய்து விடவும்.

  6. 6

    கமகம மணத்துடன் சூப்பரான ஆலு கோபி மசாலா ரைஸ் சாப்பிட தயார்... வெங்காய ரைத்தாவுடன் பரிமாறி சுவைக்கவும்..விரும்பினால் நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கலாம்.. குறிப்பு - காலிஃபிளரை 10 நிமிடம் உப்பு மஞ்சள்தூள் போட்டு கொதிக்கிற தண்ணியில் போட்ட பிறகு உபயோகிக்கவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes