தேவையான பொருட்கள்

மணி நேரம்
பேர்
  1. 2தக்காளி
  2. 2 ஸ்பூன் மிளகு
  3. 1 ஸ்பூன் சீரகம்
  4. 1பூண்டு
  5. 3 டம்ளர் தண்ணீர்
  6. 1இஞ்சி
  7. 1 கப் கொத்தமல்லி
  8. 1 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  9. தேவையானஅளவு உப்பு
  10. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  11. 1 பச்சை மிளகாய்
  12. 2சின்ன வெங்காயம்
  13. 1 ஸ்பூன் புளி
  14. 1/2 ஸ்பூன் வெந்தயம்
  15. 1/2 ஸ்பூன் கடுகு
  16. 1சிவப்பு மிளகாய்
  17. தேவையானஅளவு கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

மணி நேரம்
  1. 1

    மிளகு சீரகம் இரண்டையும் நன்கு இடித்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    பின் கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி எடுத்துக்கொண்டு ஒன்றாக அரைக்க வேண்டும் முதலில் பச்சை மிளகாய் கருவேப்பிலை அரைக்க வேண்டும்

  3. 3

    பின் கொத்தமல்லியை அரைக்கவேண்டும்

  4. 4

    தண்ணீரில் ஒரு தக்காளி,புளி சேர்த்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும் பிறகு அரைத்த கலவையை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

  5. 5

    இஞ்சி வெங்காயம் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும் பின் அதையும் தக்காளி கலந்த தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும்

  6. 6

    பின் ஒரு பூண்டை நன்கு இடித்து அதில் கலந்து கொள்ள வேண்டும்

  7. 7

    அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சிறிது வெந்தயம் கடுகு சேர்த்துக் கொண்டு தாளிக்க வேண்டும்

  8. 8

    சிறிது பெருங்காயத்தூள் சிறிது கருவேப்பிலை, சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும் பிறகு சாரை சேர்த்துக் கொள்ள வேண்டும்

  9. 9

    தேவையான அளவு உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் அதில் கொத்தமல்லியை சேர்த்து கொள்ள வேண்டும்.... சுவையான ரசம் ரெடி.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes