தேவையான பொருட்கள்

30 - 35 நிமிடங்கள்
2 நபர்
  1. காடை 1/2 கி
  2. மிளகாய் தூள் 3 டிஸ்பூன்
  3. மல்லி தூள் 1/2 டீஸ்பூன்
  4. கரம் மசாலா 1 டீஸ்பூன்
  5. இஞ்சி பூடு பேஸ்ட் 2 டீஸ்பூன்
  6. எலுமிச்சை சாறு 1/2 டீஸ்பூன்
  7. தக்காளி 2 - விழுதாக அரைக்கவும்
  8. வெங்காயம் 4
  9. எண்ணை 3 டேபிள் ஸ்பூன்
  10. பட்டை, ஏலம் தலா 2
  11. கருவேப்பிலை சிறிது
  12. மல்லியிலை
  13. உப்பு - தேவைக்கு

சமையல் குறிப்புகள்

30 - 35 நிமிடங்கள்
  1. 1

    காடை- யை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

  2. 2

    காடையுடன் மிளகாய் தூள் 2 டீஸ்பூன், இஞ்சி பூடு பேஸ்ட் 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

  3. 3

    காடை ஊறிய பிறகு
    ஒரு அகலமான கடாயில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணை சேர்த்து சூடானதும் ஊற வைத்த காடை சேர்த்து இரு புறமும் வேகவைத்து (மூடி போட்டு வேக வைக்கவும்) தனியே எடுத்து வைக்கவும்.

  4. 4

    பின் அதே எண்ணையில் பட்டை, ஏலம், கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    பின் இஞ்சி பூடு விழுது 1 டீஸ்பூன் சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும்.

  6. 6

    பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

  7. 7

    பின் மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
    மல்லி தூள் 1/2 டீஸ்பூன்
    கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
    உப்பு தேவைக்கு சேர்த்து நன்கு கலந்து பச்சை வாடை போக வதக்கவும்.

  8. 8

    பின் வேக வைத்த காடை யை சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலலந்து மூடி போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

  9. 9

    பிறகு மல்லியிலை சேர்ந்து இறக்கவும்.

  10. 10

    சுவையான காடை மசாலா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kasbena's Samayal
Kasbena's Samayal @cook_28819354
அன்று

Similar Recipes