எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. முட்டை - 4-5
  2. எண்ணெய் - 2டே. ஸ்பூன்
  3. வெங்காயம் -2
  4. இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
  5. தக்காளி - 2
  6. மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  8. கரம் மசாலா - 1 ஸ்பூன்
  9. உப்பு - தேவைக்கு
  10. மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
  11. கொத்த மல்லி - சிறிது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    4 அல்லது 5முட்டையை 10நிமிடம் வேகவைத்து பின் முட்டையின் ஓட்டை உரித்து விட்டு கேரட் துருவி கொண்டு முட்டையை துருவி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து கோல்டன் கலர் வரும் வரை வதக்கவும் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1நிமிடம் வதக்கவும் பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

  3. 3

    பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின்னர் துருவிய முட்டையை சேர்த்து கிளறி 1 1/2 கப் தண்ணீர் மற்றும் 1/4 ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கொத்த மல்லி தூவி இறக்கவும். இது சப்பாத்தி, இட்லி, தோசை உடன் சாப்பிட ஏற்றது.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manjula Sivakumar
அன்று

Similar Recipes