முட்டை நகெட்ஸ்

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#vahisfoodcorner
பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் விரும்புவர்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 6முட்டை
  2. 5பிரட்
  3. தேவையான அளவு உப்பு
  4. தேவையான அளவு மிளகுத்தூள்
  5. தேவையான அளவு சில்லி ஃபிளேக்ஸ் அல்லது மிளகாய் தூள்
  6. தேவையான அளவு கடலை எண்ணெய் (பொரிக்க)

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 4 முட்டை, தேவையான உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்றாக அடித்து கலக்க வேண்டும்

  2. 2

    இந்த கலவையை ஒரு அடி கனமான பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு,குக்கர்-ல் தண்ணீர் ஊற்றி இட்லி வேக வைப்பது போல் 10 நிமிடங்கள் வேக விடவும்

  3. 3

    வெளியே எடுத்து,ஒரு முள் கரண்டியால் குத்தி பார்த்தால்,முட்டை ஸ்பூன் இல் ஒட்டாது.இனி ஆற வைத்து,கத்தியால் நீளமாக அல்லது சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.

  4. 4

    ஆறவில்லை எனில் முட்டை பிய்ந்து விடும் வடிவம் வராது.

  5. 5

    ஒரு தட்டில் 1முட்டை யை உடைத்து ஊற்றி உப்பு மற்றும் சில்லிஃபிளேக்ஸ் கலந்து வைக்கவும். மிக்ஸியில் 3 பிரட் பிச்சி போட்டு கொரகொரப்பாக அரைத்து மற்றொரு தட்டில் வை‌க்கவு‌ம்

  6. 6

    இனி வெட்டி வைத்த துண்டுகளை முதலில் முட்டையில் பிரட்டி பிறகு பிரட் இல் பிரட்டி, மறுபடியும் முட்டையில் பிரட்டி பிரட் இல் பிரட்டி தனியாக வைக்கவும்.

  7. 7

    இவ்வாறு ஒவ்வொரு துண்டுகளையும் 2 முறை பிரட்ட வேண்டும்

  8. 8

    பிரட்-ல் முட்டையை பிரட்டுவதால் அது ஈரம் பட்டிருக்கும். எனவே பாதி துண்டுகள் பிரட்டியதும் இன்னொரு முட்டையுடன், உப்பு,சில்லி ஃபிளேக்ஸ் சேத்து கலக்கவும்.மறுபடியும் 2பிரட் மிக்ஸியில் அரைத்து பின் மீதி துண்டுகளை பிரட்ட பயன் படுத்தவும்

  9. 9

    கடைசியாக எண்ணையில் பொரித்து,சாஸ் வைத்து பறிமாறவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    சுவையான முட்டை நகெட்ஸ் ரெடி. நீங்களும் முயன்று பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes